ஊக்கமருந்து சர்ச்சையால் கோமதி மாரிமுத்துவுக்கு இடைக்கால தடை: பிடிஐ தகவல்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

ஆசிய தடகளப் போட்டியில் தங்கம் வென்ற கோமதி மாரிமுத்து , ஊக்கமருந்து சர்ச்சையில் சிக்கியுள்ளதாகவும் அவருக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் பிடிஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.


Advertisement

தோஹாவில் கடந்த மாதம் நடந்த ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில், தமிழகத்தைச் சேர்ந்த கோமதி மாரிமுத்து 800 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தங்கம் வென்றிருந்தார். இந்த நிலையில், போட்டியின்போது மேற்கொள்ள முதற்கட்ட சோதனையில் அவர் ஊக்கமருந்து உட்கொண்டதாக தெரியவந்துள்ளது என பிடிஐ நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.


Advertisement

இரண்டாவது கட்ட ஊக்க மருந்து சோதனையிலும் உறுதி செய்யப்பட்டால், கோமதியிடம் இருந்து தங்கப்பதக்கம் பறிக்கப்படுவதுடன், 4 ஆண்டுகள் தடைவிதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஊக்கமருந்து சோதனையில் கோமதிக்கு தற்காலிக தடைவிதிக்கப்பட்டிருப்பதாக உயர் அதிகாரி ஒருவர் கூறியுள்ளதாக பிடிஐ செய்தி நிறுவனம் கூறியுள்ளது.

ஏற்கெனவே கடந்த மார்ச் மாதம் நடத்தப்பட்ட சோதனையிலும் கோமதி மாரிமுத்து ஊக்கமருந்து உட்கொண்டது தெரியவந்ததாகவும், ஆனால் தேசிய ஊக்கமருந்து தடுப்பு முகமை அந்த தகவலை வெளியிடவில்லை கூறப்படுகிறது. இந்த தகவலை தேசிய ஊக்கமருந்து தடுப்பு முகமை எதற்காக தங்களிடம் தெரிவிக்கவில்லை என்பது புரியவில்லை என இந்திய தடகள சம்மேளன அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். இது தொடர்பாக தேசிய ஊக்கமருந்து தடுப்பு முகமை அதிகாரியை தொடர்பு கொண்டபோது, பதில் அளிக்க மறுத்துவிட்டதாக பிடிஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.


Advertisement

இதனிடையே ஆசிய தடகளப் போட்டியில் தங்க‌ம் வென்ற கோமதி மாரிமுத்து ஊக்க மருந்து எடுக்கவில்லை‌ என்‌றும், வேண்டுமென்றே சூழ்‌ச்சி ‌செய்து குற்றம் சாட்டப்படுவதா‌க அவரது சகோதரர் சுப்பிரமணி தெரிவித்துள்ளார்.

loading...

Advertisement

Advertisement

Advertisement