பி.எஸ்.எல்.வி. சி-46 ராக்கெட் மூலம் விண்ணில் பாய்ந்தது ‌ரிசாட்2பி 

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

புவி கண்காணிப்பை அதிகரிக்கும் வகையில் இஸ்ரோ தயாரித்த "ரிசாட்2பி" என்ற செயற்கைக்கோளை ‌பி.எஸ்.எல்.வி. சி-46 ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்பட்டது.


Advertisement

இந்தியாவின் எல்லைகளை கண்காணிப்பதற்காகவும், பாதுகாப்பை அதிகரிக்கும் வகையிலும் ரேடார் பார்வை மூலம் பூமியை கண்காணிக்க ரிசாட் 2பி செயற்கைக்கோளை இந்தியா விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ கண்டுபிடித்தது. இந்தச் செயற்கோளை பிஎஸ்எல்வி சி-46 ராக்கெட் விண்ணில் செலுத்தவும் திட்டமிட்டு, இன்று காலை சரியாக 5.27 மணிக்கு விண்ணில் பாய்ந்தது. 


Advertisement

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவண் விண்வெளி மையத்தின் முதல் ஏவுதளத்திலிருந்து பி.எஸ்.எல்.வி. சி-46 ராக்கெட் மூலம் ஏவப்பட்ட ரிசாட்-2பி ரேடார் செயற்கைக்கோள் சுமார் 615 கிலோ எடை கொண்டது. அதன் ஆயுட் காலம் 5 ஆண்டுகள் ஆகும். பேரிடர் மேலாண்மை, காடுகள் பாதுகாப்பு மற்றும் ராணுவ பயன்பாட்டுக்கு ரிசாட்-2பி ரேடார் செயற்கைக்கோள் பெரிதும் உதவும். இதில் உள்ள ரேடார்கள் மேகக்கூட்டத்தையும் தாண்டி மிக துல்லியமாக படமெடுக்கும் திறன் கொண்டவை.

 Image result for isro RISAT-2B.

ரிசாட்-2பி ரேடார் செயற்கைக்கோள் பூமிக்கு மேல 555 கிலோமீட்டர் உயரத்தில், புவி சுற்றுவட்டப்பாதையில் வெற்றிகரமாக நிலை நிறுத்தப்பட்டதையடுத்து விஞ்ஞானிகள் ஒருவருக்கொருவர் வாழ்த்துகளை பரிமாறி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். மேலும் வரும் ஆண்டில் ஐந்து ரிசாட் செயற்கைகோள்களை ஏவுவதற்கு திட்டம் வகுத்துள்ளதாக இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார். இஸ்ரோ மையம் நடப்பு ஆண்டில் விண்ணில் செலுத்தும் 3வது ராக்கெட் பிஎஸ்எல்வி 46 என்பது குறிப்பிடத்தக்கது.


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement