சமாஜ்வாதியில் குழப்பம்: சதி செய்கிறாரா அமித்ஷா?

சமாஜ்வாதியில் குழப்பம்: சதி செய்கிறாரா அமித்ஷா?
சமாஜ்வாதியில் குழப்பம்: சதி செய்கிறாரா அமித்ஷா?

உத்தரப் பிரதேசத்தில் ஆளும் சமாஜ்வாதி கட்சியை பலவீனப்படுத்த அமித்ஷா சதி செய்வதாக பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது.

உத்தரப்பிரதேசத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், சமாஜ்வாதி கட்சியிலும், முலாயம் சிங் குடும்பத்திலும் ‌ஏற்பட்டுள்ள மோதல் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. முலாயம் சிங்கிற்கும் அவர் மக‌ன் அகிலேஷ் யாதவிற்கும் இடையில் மோதல் மோதல் வெடித்ததற்கு வெறும் வேட்பாளர் பட்டியல் மட்டுமல்ல என்றும் பாஜகவின் சதி வேலையும் இதில் இருக்கிறது என்றும் டெல்லி வட்டாரத்தில் பேசப்படுகிறது. அகிலேஷ் கூட்டிய சமாஜ்வாதியின் தேசிய செயற்குழுக் கூட்டத்தில், கட்சி எம்எல்ஏக்கள் 229 பேரில் 214 பேர் கலந்து கொண்டனர். கட்சி அகிலேஷின் கட்டுப்பாட்டில் சென்றுவிட்டதை உணர்ந்ததால்தான் மகனை நீக்கிய முடிவை முலாயம் திரும்பப் பெற்றதாக டெல்லி வட்டாரத்தி‌ல் பேசப்படுகிறது.

அந்தக் கூட்டத்தில் பேசிய அகிலேஷ், சதிகாரர்களிடமிருந்து தனது தந்தையையும், கட்சியையும் காப்பாற்றி இயக்கத்தை வலுப்படுத்த எத்தகைய தியாகத்தையும் செய்யத் தயாராக இருப்பதாகக் கூறியிருந்தார். சதிகாரர்கள் என அகிலேஷ் குறிப்பிடுவது யாரை என்பது பற்றி டெல்லி அரசியல் வட்டாரத்தில் பல்வேறு செய்திகள் உலா வருகின்றன. அதில் முதலாவது இடத்தைப் பிடித்திருப்பவர் பாரதிய ஜனதா தலைவர் அமித்ஷா.

அடுத்த குடியரசுத் தலைவர் அல்லது குடியரசுத் துணைத் தலைவர் பதவியை முலாயம் சிங்கிற்கு வழங்க அமித்ஷா முன் வந்துள்ளதாகவும், அதற்கு முலாயம் விலை போய்விட்டதாகவும் செய்திகள் உலாவுகின்றன. இதற்குப் பிரதிபலனாக உத்தரப்பிரதேசத்தில் சமாஜ்வாதிக் கட்சியைப் பலவீனப்படுத்தி, வரும் தேர்தலில் அதன் தோல்விக்கு வழிவகுக்க முலாயமே உதவ வேண்டும் என திரை மறைவில் பேசி முடிக்கப்பட்டுவிட்டதாகவும் டெல்லி வட்டாரங்களில் பேசப்படுகிறது.

சமாஜ்வாதி கட்சியைப் வலுவிழக்கச் செய்து, உத்தரப்பிரதேச தேர்தலில் பாரதிய ஜன‌தாவுக்கும், மாயாவதியின் பகுஜ‌ன் சமாஜ் கட்சிக்கும் இடையில்தான் போட்டி என்கி‌ற தோற்றத்தை உருவாக்கவே இவை அனைத்தும் அரங்கேறி வருவதாகவும் கூறப்படுகிறது. பாஜகவுக்கும் மாயாவதியின் பகுஜன் கட்சிக்கும் இடையில் மட்டுமே போட்டி என்ற தோற்றத்தை ஏற்படுத்த பாஜக முயற்சிப்பதாகவும் கூறப்படுகிறது. ஆனால் முலாயம் இத்தகைய சதி எதற்கும் ஆட்படவில்லை என சமாஜ்வாதிகட்சியைச் சேர்ந்த அவரின் ஆதரவாளர்கள் கூறுகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com