மக்களவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணும் பணி குறித்து தேர்தல் அதிகாரிகளுடன் நாளை இந்தியத் தேர்தல் ஆணையர்கள் ஆலோசனை நடத்த உள்ளனர்.
543 தொகுதிகளைக் கொண்ட இந்திய நாடாளுமன்றத்தின் மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாகத் நடந்து முடிந்துள்ளது. இதில் முதன்முறையாக வாக்களிக்கும் இளம் வாக்காளர்கள் அனைவரும் ஆர்வமாக வாக்களிதனர். இதனைத்தொடர்ந்து மக்களவைத் தேர்தலின் வாக்கு எண்ணும் பணி நாளை மறுநாள் நடைபெறுகிறது. இதற்காக ஏற்பாடுகள் தீவரம் அடைந்துள்ள நிலையில் தேர்தல் அதிகாரிகளுடன் இந்தியத் தேர்தல் ஆணைய அதிகாரிகள் ஆலோசனை நடத்த உள்ளனர்.
மக்களவைத் தேர்தல் வாக்கு எண்ணும் பணி குறித்து தமிழகம் உள்ளிட்ட 10 மாநிலங்களின் தலைமைத் தேர்தல் அதிகாரிகளுடன் தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா நாளை ஆலோசனை நடத்த உள்ளார். காணொலி காட்சி மூலம் இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. கூட்டத்தில் மாவட்ட தேர்தல் அதிகாரிகள் மற்றும் காவல்துறை அதிகாரிகளும் பங்கேற்க உள்ளனர்.
Loading More post
திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 6 தொகுதிகள் ஒதுக்கீடு!
கூட்டணிக் கட்சிகள் கேட்கும் இடங்களை எல்லாம் கொடுத்துவிட முடியாது -ஆர்.எஸ்.பாரதி
ஒதுங்கிய சசிகலா... தேர்தலில் எடுபடுமா தினகரன் வசமுள்ள 3 வியூகங்கள்?!
வாஷிங்டன் சுந்தர் அரை சதம் - 2ம் நாள் முடிவில் இந்திய அணி 294 ரன்கள் குவிப்பு
25 தொகுதிகளாவது ஒதுக்கினால்தான் கையெழுத்து: தேமுதிக திட்டவட்டம்