மக்களவைத் தேர்தலையொட்டி ஃபேஸ்புக் மற்றும் கூகுள் ஆகிய இணையதளங்களில் அரசியல் கட்சிகள் சுமார் 53 கோடி ரூபாய்க்கு விளம்பரங்கள் செய்துள்ளன.
மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று முடிந்துள்ளன. வரும் 23ம் தேதி நாடு முழுவதும் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது முதலே அரசியல் கட்சிகள் பிரசாரங்களில் இறங்கின. குறிப்பாக இந்த தேர்தலில் சமூக வலைதளங்கள் முக்கிய பங்காற்றின.
சமூக வலைதளங்களுக்கென தனி பிரிவு உருவாக்கப்பட்டு பல கட்சிகள் தங்களது பிரச்சாரங்களை நடத்தின. போலி செய்திகள், தேர்தல் விதிமுறைகளை மீறிய செய்திகள் ஆகியவை வெளியாகக்கூடாது என்பதில் சமூக வலைதள நிறுவனங்களும் கவனமாக இருந்தன. ஆனால் அதையும் மீறி பல செய்திகள் பரப்பப்பட்டன.
இந்நிலையில் தேர்தலையொட்டி ஃபேஸ்புக் மற்றும் கூகுள் ஆகிய இணையதளங்களில் அரசியல் கட்சிகள் சுமார் 53 கோடி ரூபாய்க்கு விளம்பரங்கள் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிப்ரவரி மாதம் முதல் தேர்தல் முடிவடைந்த மே மாதம் வரை ஃபேஸ்புக் மற்றும் கூகுள் இணையதளங்களில் அரசியல் கட்சிகள் அதிகளவு விளம்பரங்களைச் செய்துள்ளன.
இதில், பாரதிய ஜனதா கட்சி ஃபேஸ்புக்கில் விளம்பரங்கள் செய்வதற்காக 4 கோடியே 23 லட்சம் ரூபாய் செலவிட்டு முதலிடத்தில் உள்ளது. இதேபோல், கூகுளில் 17 கோடி ரூபாய் அளவிற்கு பாஜக விளம்பரங்கள் செய்துள்ளது. எதிர்க்கட்சியான காங்கிரஸ் ஃபேஸ்புக்கில் விளம்பரங்களுக்காக ஒரு கோடியே 46 லட்சம் ரூபாய் செலவிட்டுள்ளது. கூகுளில் விளம்பரங்கள் செய்ததற்காக 2 கோடியே 71 லட்சம் ரூபாயை காங்கிரஸ் செலவிட்டுள்ளது.
திரிணாமுல் காங்கிரஸ் கட்சி ஃபேஸ்புக்கில் விளம்பரங்கள் செய்வதற்காக ரூ.29.28 லட்சம் செலவு செய்துள்ளது. அதேபோல் ஆம் ஆத்மி கட்சி ஃபேஸ்புக்கில் விளம்பரங்கள் செய்ய 13.62 லட்ச ரூபாயும், கூகுளில் விளம்பரம் செய்ய 2.18 கோடி ரூபாயும் செலவு செய்துள்ளது
Loading More post
‘உதயசூரியன் சின்னத்தில்தான் போட்டி’ திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 6 தொகுதிகள் ஒதுக்கீடு!
டாப் 5 தேர்தல் செய்திகள் : பாஜக வேட்பாளர் உத்தேச பட்டியல்..பாமகவுக்கு மாம்பழ சின்னம்!
கொளத்தூர் இல்லை.. திருவொற்றியூர் தொகுதியில் சீமான் களமிறங்க வாய்ப்பு
முதலிடத்தில் இந்தியா - டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் நியூசிலாந்துடன் மோதல்!
பாமகவுக்கு மாம்பழம் சின்னம் ஒதுக்கீடு : தேர்தல் ஆணையம்
“6 தொகுதிக்கு கட்டாயப்படுத்தவில்லை; வேண்டுகோள் வைத்தார்கள்” திருமாவளவன் சிறப்பு பேட்டி
ஓவைசி Vs அப்பாஸ் சித்திக்... மேற்கு வங்கத்தில் பாஜகவுக்கு சாதகமா? - ஒரு பார்வை
ராகுல் காந்திக்கு பலப்பரீட்சை: காங்கிரஸின் 'ஜி-23' தலைவர்களால் சிக்கல் ஏன்?
“அவன் அடிச்சதே ஆண்டர்சன் பால்ல தான்யா..” பொளந்து கட்டிய ‘மான்ஸ்டர்’ ரிஷப் பண்ட்!