தேசிய முற்போக்கு கூட்டணி வெற்றிக்கு அதிமுக ஒரு அங்கமாக இருக்கும் என தமிழ்வளர்ச்சித் துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.
மத்திய ஆட்சியை தீர்மானிக்கு நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவுகள் 7 கட்டமாக நிறைவு பெற்றுள்ளது. இதையடுத்து 23ஆம் தேதி வெளியாகவுள்ள தேர்தல் முடிவுகளை எதிர்பார்த்து நாடே காத்திருக்கிறது. இந்த நிலையில் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகளை தேசிய ஊடகங்கள் வெளியிட்டுள்ளன. இதில் பாஜகவே பெரும்பான்மை இடங்களை பிடிக்கும் எனப் பெரும்பாலான ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இதேபோன்று தமிழகத்தில் திமுக 30க்கும் மேற்பட்ட இடங்களைப் பிடிக்கும் எனவும், அதிமுக கூட்டணி 5 இடங்கள் பிடிக்க வாய்ப்பிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தேசிய முற்போக்கு கூட்டணி வெற்றிக்கு அதிமுக ஒரு அங்கமாக இருக்கும் என தமிழ்வளர்ச்சித் துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.
தேர்தலுக்குப் பிறகான கருத்துக்கணிப்பு குறித்து புதிய தலைமுறைக்கு பேட்டியளித்த அவர், தமிழ்நாட்டில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்தது பாஜகவின் சிறந்த வியூகம் என்றும், வெற்றிக்கு இதுவும் ஒரு காரணமாக இருக்கும் என்றும் அவர் கூறினார்.
மேலும், “அதிமுக கூட்டணி 4 லிருந்து 18 தொகுதிகள் என்று கணிக்கும்போது அது 18 தொகுதிகளாகவே இருக்கலாம். எங்களின் கணிப்பைவிட கருத்துக் கணிப்பு குறைவாகவே வந்துள்ளது. அது எங்களுக்கு மிகவும் வருத்தமளிக்கிறது” என்றார்.
Loading More post
“மேற்கு வங்கத்தில் தேர்தல் பரப்புரைக்கு அனுமதி இல்லை!” - தேர்தல் ஆணையம்
கோவிஷீல்டு விலை உயர்வு: கொரோனா தடுப்பூசி சந்தையில் பொதுமக்களுக்கு சுமையா? - ஒரு பார்வை
தமிழகத்தில் அனைவருக்கும் இலவசமாக தடுப்பூசி - தமிழக அரசு அறிவிப்பு
தமிழகத்தில் 12000ஐ கடந்த தினசரி கொரோனா பாதிப்பு - 59 பேர் உயிரிழப்பு
மும்முறை உருமாறிய 'பெங்கால் கொரோனா'வின் தீவிரத்தன்மை எத்தகையது? - ஒரு பார்வை
கோவிஷீல்டு விலை உயர்வு: கொரோனா தடுப்பூசி சந்தையில் பொதுமக்களுக்கு சுமையா? - ஒரு பார்வை
மும்முறை உருமாறிய 'பெங்கால் கொரோனா'வின் தீவிரத்தன்மை எத்தகையது? - ஒரு பார்வை
காரை விற்று மக்களுக்கு உதவி... மும்பையின் 'ஆக்சிஜன் மேன்' ஷாஹனாவாஸ்!
’cowin’... 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்ள பதிவுசெய்யும் முறை