JUST IN

Advertisement

ராகுல் காந்தியுடன் சந்திரபாபு நாயுடு மீண்டும் சந்திப்பு

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

மக்களவைத் தேர்தலுக்கான இறுதிக்கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை, ஆந்திர மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு இரண்டாவது நாளாக இன்றும் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.


Advertisement

மக்களவைத் தேர்‌‌தலுக்கான கடைசிக்கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வருகிறது. வரும் 23 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறு கிறது. இந்நிலையில் அடுத்த ஆட்சி அமைப்பது தொடர்பாக, பல்வேறு கட்சித் தலைவர்களை சந்தித்து வருகிறார் ஆந்திர முதலமைச்சர் சந்திர பாபு நாயுடு. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோரை சந்தித் துப் பேசிய அவர், பாரதிய ஜனதாவுக்கு எதிரான மனநிலையில் உள்ள, தெலங்‌கானா ராஷ்டீரிய சமிதி உள்ளிட்ட அனைத்துக் கட்சியினரையும், மெகா கூட்டணிக்கு வரவேற்பதாக தெரிவித்தார்.


Advertisement

இதனைத் தொடர்ந்து சந்திரபாபு நாயுடு, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை நேற்று சந்தித்து பேசினார். அப்போது பாஜக ஆட்சி அமைவதை தடுக்க என்னென்ன முயற்சிகள் எடுப்பது என்பது குறித்து ஆலோசனை செய்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி, சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் ஆகியோரையும் சந்திரபாபு நாயுடு சந்தித்து பேசினார்.

இந்நிலையில், ராகுல் காந்தியை இன்று அவர் மீண்டும் சந்தித்து ஆலோசனை நடத்தினார். இது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. 

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement