ஓரின ஈர்ப்பாளர்களின் திருமணத்துக்கு தைவான் நாட்டு நாடாளுமன்றம் ஒப்புதல் வழங்கியுள்ளது. விரைவில் சட்ட அந்தஸ்து வழங்கப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது
ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, சில ஐரோப்பிய நாடுகளில் ஓரின ஈர்ப்பாளர்கள் திருமணம் செய்துகொள்வது சட்ட ரீதியாக ஏற்றுக்கொள்ளப்படுகிறது. அதைப்போல் தங்களுக்கும் சட்ட அந்தஸ்து வழங்க வேண்டுமென தைவான் நாட்டின் ஓரின ஈர்ப்பாளர்கள் சில ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வந்தனர். இது குறித்து கடந்த 2017ம் ஆண்டு உத்தரவிட்ட தைவான் நாட்டு அரசியல் சாசன நீதிமன்றம், ஓரின ஈர்ப்பாளர்கள் திருமணம் தொடர்பான சட்ட திருத்தத்தை இரண்டு ஆண்டுகளில் நிறைவேற்ற வேண்டுமென கூறியது.
இது தொடர்பாக மக்களிடம் கருத்துக்கேட்கப்பட்டது. அதில் பெரும்பாலான மக்கள் ஓரின ஈர்ப்பாளர்களின் திருமணத்துக்கு எதிராகவே கருத்து தெரிவித்தனர். ஆனால் அரசியல் சாசன நீதிமன்றத்தின் உத்தரவுக்கு கட்டுப்பட்டு ஓரின ஈர்ப்பாளர்களின் திருமணம் தொடர்பாக தைவான் நாடாளுமன்றத்தில் மசோதா கொண்டு வரப்பட்டது.
மசோதா மீதான வாக்கெடுப்பில் ஓரின ஈர்ப்பாளர்களின் திருமணத்துக்கு ஆதரவாக உறுப்பினர்களின் ஆதரவு அதிகமாக இருந்ததால் ஓரின ஈர்ப்பாளர்களின் திருமணத்துக்கு தைவான் நாட்டு நாடாளுமன்றம் ஒப்புதல் வழங்கியுள்ளது. இதனையடுத்து விரைவில் சட்ட அந்தஸ்து வழங்கப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
ஓரின ஈர்ப்பாளர்களின் திருமணத்துக்கு தைவான் நாட்டு நாடாளுமன்றம் ஒப்புதல் வழங்கியதற்கு அந்நாட்டு ஓரின ஈர்ப்பாளர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். தங்களது திருமணம் சட்ட ரீதியாக ஏற்றுக்கொள்ளப்படுவது மகிழ்ச்சியான ஒன்று என அவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
ஆசிய நாடுகளிலேயே ஓரின சேர்க்கையாளர்களின் திருமணத்துக்கு சட்ட அந்தஸ்து வழங்கப்போகும் முதல் நாடு தைவான் என்பது குறிப்பிடத்தக்கது.
Loading More post
71 ஆண்டுகளுக்குப் பிறகு இரண்டே நாளில் முடிவுக்கு வந்த டெஸ்ட் போட்டி
பிராந்திய மொழிகளில் மருத்துவம், பொறியியல் கல்வி பயில அனுமதி - கோவையில் பிரதமர் பேச்சு
சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட உதயநிதி விருப்பமனு!
மார்ச் 7 ஆம் தேதி திமுக பொதுக்குழு கூட்டம் : பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு
புதுச்சேரியில் அமலுக்கு வந்தது குடியரசுத் தலைவர் ஆட்சி!
ராகுல் காந்தியின் 'வடக்கு - தெற்கு' கருத்து: அதிர்வலையும் விளைவுகளும் - ஒரு பார்வை
“இப்படியா பிட்ச் ரெடி பண்ணுவீங்க”- நரேந்திர மோடி ஸ்டேடியத்தை கலாய்த்து தள்ளும் நெட்டிசன்ஸ்
’வடிவேலு உடல்மொழியை நினைச்சாலே பொழைச்சிக்கலாம்!’ - சிவாங்கி கலகல பேட்டி
திரையும் தேர்தலும் 7: எம்.ஆர்.ராதா தனிப்பாதை; சிவாஜியின் 'நகர்வு'; எம்.ஜி.ஆரின் எழுச்சி!