தேர்தல் ஆணையம் நடுநிலையுடன் செயல்படாமல் பாரதிய ஜனதாவுக்கு ஆதரவாக நடந்து கொண்டுள்ளதாக காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி குற்றஞ்சாட்டியுள்ளார்.
டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தேர்தல் ஆணையம் பாரதிய ஜனதாவுக்கு ஆதரவாக நடந்து கொண்டுள்ளதாக குற்றஞ்சாட்டியுள்ளார். மோடி தான் நினைத்ததை எல்லாம் பரப்புரையில் பேசினார் என்றும் ஆனால் தாங்கள் அவ்வாறு பேசாத வகையில் தடுக்கப்பட்டதாகவும் ராகுல் காந்தி தெரிவித்தார். தேர்தல் அட்டவணையே பாரதிய ஜனதாவுக்கு சாதகமான வகையில் தயாரிக்கப்பட்டது போல் தோன்றுவதாகவும் ராகுல் தெரிவித்தார். இந்த தேர்தலில் மோடியும் அமித் ஷாவும் பெரும் பண பலத்துடன் களமிறங்கியதாகவும் ஆனால் காங்கிரஸ் கட்சி உண்மையை மட்டுமே தன்னுடன் வைத்துக்கொண்டு போட்டியிட்டதாகவும் ராகுல் தெரிவித்தார். பிரதமர் மோடி தன் ஆட்சிக் காலம் முடிய சில நாட்களே இருந்த போது முதன்முறையாக செய்தியாளர்களை சந்தித்துள்ளதாகவும் ராகுல் குறிப்பிட்டார்.
மேலும் பேசிய அவர், இந்த தேர்தலை பொறுத்தவரை பாரதிய ஜனதா ஆட்சியை அகற்ற வேண்டும் என்பதுதான் காங்கிரசின் முதல் நோக்கமாக இருந்தது, காங்கிரஸ் கொள்கைளை பரப்புவதை 2வது இலக்காக தான் இருந்தது என்று ராகுல் குறிப்பிட்டார். உத்தரப்பிரதேசத்தில் சமாஜ்வாதி, பகுஜன் அணியில் சேராதது ஏன் என்ற கேள்விக்கு பதில் அளித்த அவர், உத்தப்பிரதேசத்தில் ஆட்சியமைப்பதற்கு அடித்தளம் அமைப்பதை 3வது இலக்காக கொண்டு இத்தேர்தலை தாங்கள் சந்தித்ததாக ராகுல் காந்தி தெரிவித்தார். பிரதமர் மோடி மற்றும் அமித் ஷா நடத்திய செய்தியாளர் சந்திப்பும் ராகுல் காந்தி நடத்திய செய்தியாளர் சந்திப்பும் ஒரே நேரத்தில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
Loading More post
திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 6 தொகுதிகள் ஒதுக்கீடு!
கூட்டணிக் கட்சிகள் கேட்கும் இடங்களை எல்லாம் கொடுத்துவிட முடியாது -ஆர்.எஸ்.பாரதி
ஒதுங்கிய சசிகலா... தேர்தலில் எடுபடுமா தினகரன் வசமுள்ள 3 வியூகங்கள்?!
வாஷிங்டன் சுந்தர் அரை சதம் - 2ம் நாள் முடிவில் இந்திய அணி 294 ரன்கள் குவிப்பு
25 தொகுதிகளாவது ஒதுக்கினால்தான் கையெழுத்து: தேமுதிக திட்டவட்டம்