17 வது மக்களவைக்கான இறுதிக்கட்ட வாக்குப்பதிவு நாளை 8 மாநிலங்களில் உள்ள 59 தொகுதிகளில் நடைபெறுகிறது. இந்தத் தேர்தலில் பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட முக்கிய வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவின் 17 வது மக்களவையைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. ஏப்ரல் 11 ஆம் தேதி தொடங்கிய தேர்தலில், இதுவரை 6 கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்துள்ளது. இதில் 483 தொகுதிகளில் தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது. இறுதிக்கட்டமான 7 வது கட்டத் தேர்தல் நாளை நடைபெறுகிறது. இறுதிக்கட்ட வாக்குப்பதிவை தொடர்ந்து வரும் 23-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.
உத்தரப்பிரதேசம்,மேற்குவங்கம்,பஞ்சாப், பீகார், மத்தியப்பிரதேசம் உள்ளிட்ட 8 மாநிலங்களில் உள்ள 59 தொகுதிகளில் நாளை தேர்தல் நடைபெற உள்ளது. பஞ்சாப், உத்தரப்பிரதேசத்தில் தலா 13 தொகுதிகள், மேற்குவங்கத்தில் 9 தொகுதிகள், பீகாரில் 8 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. மத்தியப் பிரதேசத்தின் 8 தொகுதிகள், இமாசலப்பிரதேசத்தின் 4 தொகுதிகள், ஜார்க்கண்டில் 3 தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. சண்டிகரில் ஒரு மக்களவைத் தொகுதியில் வாக்குப்பதிவு நாளை நடக்க உள்ளது. இந்த 59 தொகுதிகளில் பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட 918 வேட்பாளர்கள் இறுதிக்கட்டத் தேர்தல் களத்தில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Loading More post
'நல்ல நாள்', 'சமூக நீதி' - முதற்கட்ட வேட்பாளர் பட்டியல்... அதிமுக 'முந்தியது' ஏன்?
திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 6 தொகுதிகள் ஒதுக்கீடு!
கூட்டணிக் கட்சிகள் கேட்கும் இடங்களை எல்லாம் கொடுத்துவிட முடியாது -ஆர்.எஸ்.பாரதி
ஒதுங்கிய சசிகலா... தேர்தலில் எடுபடுமா தினகரன் வசமுள்ள 3 வியூகங்கள்?!
வாஷிங்டன் சுந்தர் அரை சதம் - 2ம் நாள் முடிவில் இந்திய அணி 294 ரன்கள் குவிப்பு
'நல்ல நாள்', 'சமூக நீதி' - முதற்கட்ட வேட்பாளர் பட்டியல்... அதிமுக 'முந்தியது' ஏன்?
கேரளாவில் கட்சி மாறும் நிர்வாகிகள்... சமூக நீதியை உறுதிப்படுத்த தவறியதா காங்கிரஸ்?!
ஒதுங்கிய சசிகலா... தேர்தலில் எடுபடுமா தினகரன் வசமுள்ள 3 வியூகங்கள்?!
அப்பாஸ் சித்திக்: மேற்கு வங்க அரசியலின் புது வரவு... யாருக்கு லாபம்?