வறுமையிலும் தன் திறமையால் வென்று காட்டிய வீராங்கனை புஷ்பா

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

வறுமையின் இருளை தன் திறமையால் வென்று வெளிச்சத்திற்கு வந்துள்ளார் நாகை மாவட்டம் முடிகண்டநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த கூடைப்பந்து வீராங்கனை புஷ்பா. 


Advertisement

நாகை மாவட்டத்திலுள்ள முடிகண்டநல்லூர் என்னும் குக்கிராமத்தில், ஓலைக் குடிசையில் வளர்ந்த புஷ்பா, தனது திறமையை மட்டுமே மூலதனமாகக் கொண்டு இன்று இந்த நிலையை எட்டியுள்ளார். தனது அக்காவை பார்த்து கூடைப்பந்து விளையாட தொடங்கிய புஷ்பா, தீவிர பயிற்சிக்குப் பின் நான்கே வருடத்தில் இந்திய அணிக்கு விளையாடும் அளவிற்கு தன்னை தகுதி படுத்திக்கொண்டார்.


Advertisement

ஆசியக் கூடைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டியில் அண்மையில் இந்திய அணி சார்பாக பங்கேற்ற இவர் சீனா, இந்தோனேசியா போன்ற நாடுகளுக்குச் சென்று விளையாடி இந்திய அணியின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்து தமிழகத்திற்கு பெருமை சேர்த்துள்ளார். தேசிய அணிக்காக விளையாடி வரும் வீராங்கனை ஒருவர் இன்றளவும் ஓலைக் குடிசையில் வசிக்கிறார் என்பது வருத்தமான உண்மை. விளையாட்டு போட்டிகள் மூலம் கிடைக்கும் பரிசுத்தொகையே இன்றும் குடும்ப பாரத்தை போக்கி வருகிறது என அவர் தெரிவிக்கிறார். 

தந்தை இல்லாத நிலையில், ஆடு மாடு மேய்த்து, கூலி வேலை செய்தே புஷ்பாவின் தாயார் மஞ்சுளா இரு பெண் பிள்ளைகளையும் வளர்த்துள்ளார். வறுமை வாட்டியபோதும் புஷ்பா விளையாட்டில் முன்னேறுவதற்கு தேவையான அத்தனை உதவிகளையும் செய்து கொடுத்துள்ளார் மஞ்சுளா. 


Advertisement

வறுமையை போக்காமல் விளையாட்டுக்கு ஊக்கப்படுத்துவதா எனப் பலர் அப்போது மஞ்சுளாவை விமர்சித்துள்ளனர். அந்த விமர்சனங்களுக்கு எல்லாம் பதிலடி கொடுக்கும் வகையில் புஷ்பா தற்போது கூடைப்பந்து விளையாட்டில் முத்திரை பத்திருப்பது மஞ்சுளாவை வெகுவாகவே மகிழ்ச்சி அடைய வைத்திருக்கிறது.

பொருளாதார சூழலை மேம்படுத்த அரசு வேலை வேண்டும் என்ற கோரிக்கையை புஷ்பா முன்வைக்கும் நிலையில், சாதனைப் படைத்த பின்பும் ஒரு சில விளையாட்டிற்கு காட்டப்படும் பாரபட்சம் களைய வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

loading...

Advertisement

Advertisement

Advertisement