ஐதராபாத்தில் கடும் வெயில்: சிரஞ்சீவி படத்தில் நடித்த ரஷ்ய நடிகர் திடீர் மரணம்!

Russian-shooting-for-Chiru-movie-dies-of-heatstroke-in-city

சிரஞ்சீவி படத்தில் நடித்த ரஷ்ய நடிகர், கடும் வெப்பம் காரணமாக ஐதராபாத்தில் திடீரென மரணமடைந்தார். அவரிடம் பாஸ்போர்ட் உள்ளிட்ட ஆவணங்கள் இல்லாததால் போலீசார் விசாரித்து வருகின்றனர். 


Advertisement

சுதந்திரப் போராட்ட வீரர், உய்யலவாடா நரசிம்ம ரெட்டியின் வாழ்க்கை வரலாறு, ’சைரா நரசிம்ம ரெட்டி’ என்ற பெயரில் சினிமாவாகி வருகிறது. தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி, ரெட்டியாக நடிக்கிறார். அமிதாப்பச்சன், நயன்தாரா, சுதீப், தமன்னா, விஜய் சேதுபதி உட்பட பலர் நடிக்கின்றனர். ரத்னவேலு ஒளிப்பதிவு செய்கிறார். சுரேந்தர் ரெட்டி இயக்குகிறார். 


Advertisement

அதிகப் பொருட்செலவில் உருவாகும் இந்த வரலாற்றுப் படத்தில் ஏராளமான பிரிட்டீஷ் நடிகர்களும் நடிக்கின்றனர். அதில் ஒருவராக நடித்தவர் அலெக்ஸாண்டர் (38). இவர் ரஷ்யாவைச் சேர்ந்தவர். கடந்த ஏப்ரல் மாதம் இந்தியா வந்த அவர், தனது நண்பர் போரெஸூடன் கோவாவில் தங்கினார். பின்னர், மும்பை சென்ற அவர், ’சைரா நரசிம்ம ரெட்டி’ படத்தின் ஷூட்டிங்கிற்கு ஏஜெண்ட் மூலம் அனுப்பி வைக்கப்பட்டார். பிரிட்டீஷ்காரர்களில் ஒருவராக அவர் நடித்தார். 

ஐதராபாத், கடப்பா உள்பட பல்வேறு பகுதிகளில் நடந்த படப்பிடிப்பில் கலந்துகொண்ட அலெக்ஸாண்டர், கடந்த சில நாட்களாக ஐதராபாத்தில் சுற்றித் திரிந்துள்ளார். அங்கு கடும் வெயில் அடிக்கிறது. வெப்பம் தாங்காமல் மக்கள் வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடக்கின்றனர். இந்நிலையில், கடந்த செவ்வாய்க்கிழமை அங்குள்ள சைபர் சிட்டி அருகே மயங்கிய நிலையில் கிடந்தார் அலெக்ஸாண்டர். போலீசார் அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் நேற்று இறந்தார்.


Advertisement

அவரிடம் பாஸ்போர்ட் உள்ளிட்ட எந்த ஆவணங்களும் இல்லை. கேமரா ஒன்று இருந்தது. அதைப் பார்த்தபோதுதான், ’சைரா நரசிம்ம ரெட்டி’ படத்தில் நடித்திருப்பது தெரியவந்தது. பின்னர் கோவாவில் இருக்கும் அவர் நண்பரை தொடர்பு கொண்டு போலீசார் தெரிவித்தனர். அவர் ஐதரா பாத் வந்துகொண்டிருப்பதாக போலீசார் தெரிவித்தனர். 

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement