சந்திரபாபு நாயுடுவுடன் திமுக பொருளாளர் துரைமுருகன் சந்திப்பு

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

ஆந்திரப் பிரதேச முதலமைச்சர் சந்திரபாபுவை திமுக பொருளாளர் துரைமுருகன் சந்தித்துள்ளார். 


Advertisement

சென்னையில் திமுக தலைவர் ஸ்டாலினை தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ சந்திந்தார். இந்தச் சந்திப்பின் போது துரைமுருகனும் உடன் இருந்தார். இந்த நிலையில், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவை துரைமுருகன் இன்று சந்தித்துள்ளார். இந்தச் சந்திப்பின் போது, துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்தும் உடன் இருந்தார். 

இதுசந்திப்பு தொடர்பாக புதிய தலைமுறைக்கு பேசிய துரைமுருகன், ‘சந்திரபாபு உடனான சந்திப்பு அரசியல் ரீதியானது அல்ல. மனைவி மகனுடன் கோயிலுக்கு சென்றுவிட்டு திரும்பும் வழியில் அமராவதியில் சென்று சந்திரபாபு நாயுடுவை சந்தித்தேன்’ எனக் கூறியுள்ளார். ஆந்திர மாநிலம் அமராவதியில் இந்தச் சந்திப்பு நடைபெற்றுள்ளது.  


Advertisement

         

நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கைக்கு இன்னும் 10 நாட்களே உள்ள நிலையில், இரண்டு அரசியல் தலைவர்கள் சந்தித்துள்ளது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. 

loading...

Advertisement

Advertisement

Advertisement