பழம்பெரும் ஹாலிவுட் நடிகை டோரிஸ் டே காலமானார்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

பிரபல ஹாலிவுட் நடிகையும் பாடகியுமான டோரிஸ் டே, கலிபோர்னியாவில் காலமானார். அவருக்கு வயது 97.


Advertisement

நடனக் கலைஞராக வேண்டும் என்று நினைத்த டோரிஸ் டே, சிறுவயதில் கார் விபத்தைச் சந்தித்தார். அதில் அவர் கால் எலும்பு முறிந்தது. இதனால் 15 வயதில் பாடகியானார். பின்னர் ஹாலிவுட் பட ஹீரோயின் வாய்ப்பு கிடைத்தது. 1948 ஆம் வருடத்தில் இருந்து 1968 ஆம் ஆண்டு வரை, சுமார் 39 படங்களில் நடித்துள்ளார். ஏராளமான டிவி தொடர்களில் பங்கேற்றுள்ளார்.

ராக் ஹட்சனுடன் இவர் இணைந்து நடித்த, ’பில்லோ டாக்’, ’லவ்வர் கம் பேக்’, ’செண்ட் மீ நோ பிளவர்ஸ்’ ஆகிய படங்கள் அப்போது பரபரப்பாகப் பேசப்பட்டன. ’பில்லோ டாக்’ படத்தில் சிறப்பாக நடித்தற்காக ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டிருந்தார். ஆனால், கிடைக்கவில்லை. 


Advertisement

ஆல்பிரட் ஹிட்ச்காக்கின் ’த மேன் ஹூ நியூ டூ மச்’, டெல்பெர்ட் மன் இயக்கிய ’தேட் டச் ஆப் மிங்’ ஆகிய படங்கள், அவரை உலகம் முழுவதும் அறிய வைத்தன. அந்த காலத்திலேயே, பக்க வீட்டுப் பெண் இமேஜை பெற்ற நடிகை இவர். 

கலிபோர்னியாவில் வசித்து வந்த டோரிஸ் டே, உடல்நலக்குறைவு காரணமாக திடீரென்று காலமானார். அவரது மறைவுக்கு ஹாலிவுட் பிரபலங்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement