கொண்டாட்டத்தில் தனிமையான யுவராஜ் சிங் ? - ரசிகர்கள் செண்டிமெண்ட்..!

Yuvaraj-Singh-not-mingle-with-Mumbai-Indian-Team-mets-in-Winning-Celebration

ஐபிஎல் கொண்டாட்டத்தில் மும்பை வீரர் யுவராஜ் சிங் தனியாக நிற்கும் புகைப்படம் வைரலாகியுள்ளது.


Advertisement

ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டியில் சென்னையை வென்று மும்பை இந்தியன்ஸ் அணி கோப்பையை கைப்பற்றியது. இருந்தாலும், மும்பை ரசிகர்களில் பலர் யுவராஜ் சிங் அணியில் இல்லாதது வருத்தம் தான் என தெரிவித்திருந்தனர். சென்னை அணியில் அம்பத்தி ராயுடு, ரெய்னா, வாட்சன் சில போட்டிகளில் தொடர்ந்து சரியாக விளையாடாத போதிலும் கேப்டன் தோனி அவர்களுக்கு வாய்ப்பளித்தார். சிறப்பாக விளையாடவில்லை என்றாலும், நம்பிக்கையும் மீண்டும் அவர்களை தோனி அணியில் சேர்த்தது ரசிகர்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. 


Advertisement

ஆனால், மும்பை அணியின் முதல் லீக் போட்டியிலேயே 35 பந்துகளில் 50 ரன்கள் அடித்தார் யுவராஜ் சிங். அதற்கு அடுத்த போட்டியில் 12 பந்துகளில் 23 ரன்கள் சேர்த்தார். இதனால் யுவராஜ் சிங் ரசிகர்கள் உற்சாகமடைந்தனர். இருப்பினும் அடுத்த இரண்டு போட்டிகளில் அவர் சரியாக பேட்டிங் செய்யவில்லை. எனவே அணியில் அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. அப்போது பறிபோன யுவராஜின் வாய்ப்பு இறுதி வரையிலும் கிடைக்கவில்லை. 

இந்நிலையில் இறுதிப் போட்டியிலும் மும்பை வென்றுவிட்டது. கோப்பை வென்ற அந்த அணியின் வீரர்கள் போட்டோவிற்கு போஸ் கொடுத்து உற்சாகமாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது யுவராஜ் மட்டும் சற்று தள்ளி தனிமையில் நிற்கும் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. இதனால் அவர் அணியுடன் சேர்ந்து நிற்க முடியாத மனநிலையில் இருந்தார் என்றும், அவர் தனிமைபடுத்தப்பட்டதாகவும் அவரது ரசிகர்கள் வருத்தம் தெரிவித்து வருகின்றனர். இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் பரவி, யுவராஜ் சிங்கிற்கு ஆதரவு அலை பெருகியுள்ளது. 


Advertisement
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement