பாலின மாற்று அறுவை சிகிச்சைக்கு தந்தை அனுமதி மறுத்ததால் 21 வயது இளைஞர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது
சென்னை விருகம்பாக்கத்தைச் சேர்ந்தவர் கஜேந்திரன். அவரது மகன் பார்த்தசாரதி. 21 வயதான பார்த்தசாரதி, பிசிஏ பட்டதாரி. ஆனால் குடும்பத்தினர் தொடர்ந்து அழுத்தம் கொடுத்த போதும் அவர் வேலை தேடுவதில் ஆர்வம் காட்டவில்லை என கூறப்படுகிறது. தன்னுடைய நண்பர்களுடனும் பார்த்தசாரதி சேர்வதில்லை என்றும் வீட்டுக்குள்ளே முடங்கி கிடந்ததாகவும் போலீசார் விசாணையில் தெரியவந்துள்ளது. மேலும் பார்த்தசாரதி நடந்து கொள்ளும் விதத்தில் மாறுதல் தெரிந்துள்ளது. இந்நிலையில் தான் பாலின மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டுமென கஜேந்திரனிடம் பார்த்தசாரதி அனுமதி கோரியுள்ளார். ஆனால் கஜேந்திரன் மறுத்துவிட்டதாக தெரிகிறது
இதனால் மனமுடைந்த பார்த்தசாரதி வீட்டை விட்டு வெளியேறி மணலியில் உள்ள மூன்றாம் பாலினத்தவர்கள் குழுவுடன் சேர்ந்து தங்கியுள்ளார். 3 நாட்களுக்கு பிறகு பார்த்தசாரதியை தேடி வந்த கஜேந்திரன், பார்த்தசாரதியை வீட்டுக்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளார். ஆனால் பார்த்தசாரதி மறுத்துவிட்டார். கண்டிப்பாக வீட்டுக்கு வர வேண்டுமென கூறிவிட்டு கஜேந்திரன் சென்றுவிட்டார். இதனால் மனமுடைந்த பார்த்தசாரதி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இந்த தற்கொலை குறித்து மணலி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்
Loading More post
சசிகலாவுக்கு கொரோனா தொற்று - ஆர்டி பிசிஆர் சோதனையில் உறுதி
“என் சந்தோஷத்தை வார்த்தைகளால் சொல்ல முடியாது” -சொந்த ஊரில் இந்திய கிரிக்கெட் வீரர் நடராஜன்
சசிகலாவின் நுரையீரலில் தீவிர தொற்று - மருத்துவ அறிக்கை சொல்வது என்ன?
கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்வதுபோல கர்நாடக மருத்துவர்கள் நடித்தார்களா? - உண்மை இதுதான்
புனே சீரம் தடுப்பூசி நிறுவனத்தில் பயங்கர தீ விபத்து: 5 பேர் பரிதாப பலி!
இந்தியக் குடும்பங்களில் சுரண்டப்படும் பெண்களின் உழைப்பு - ‘தி கிரேட் இண்டியன் கிச்சன்’
10 கட்ட பயிற்சிகளை முடித்த தேனி மாணவி: விண்வெளி கனவுக்கு தடைபோடும் நிதிச் சுமை!
'Is Love Enough? Sir' - காதலில் காசு ஒரு பொருட்டே இல்லைன்னு யார் சார் சொன்னது?!
மனிதர்கள் செய்த கொடுமை... 40 லிட்டர் ரத்தம் வெளியேற்றம்... சோர்வடைந்து இறந்த காட்டு யானை!