“பொறுப்பற்ற முறையில் பேசும் ஒருவர் பிரதமராக நீடிக்கக் கூடாது” - சீதாராம் யெச்சூரி

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

மேகங்களால், இந்திய விமானங்கள் பாகிஸ்தானின் ரேடார் கண்காணிப்பில் இருந்து தப்பிவிடும் என்ற பிரதமர் நரேந்திர மோடியின் பேட்டி பல்வேறு தரப்பினரிடையே விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.


Advertisement

புல்வாமா தாக்குதலில் 40 சி.ஆர்.பி.எப். வீரர்கள் உயிரிழந்ததையடுத்து பாகிஸ்தானின் பாலாகோட் பகுதியில் உள்ள பயங்கரவாதிகள் முகாம் மீது இந்திய விமானப்படை தாக்குதல் நடத்தியது. இந்நிலையில், தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த பிரதமர் நரேந்திர மோடி, தாக்குதலுக்கு திட்டமிட்ட நாளில், வானிலை மோசமாக இருந்ததால், வேறு ஒரு நாளில் தாக்குதல் நடத்தலாம் என நிபுணர்கள் தெரிவித்ததாகவும், ஆனால், மேகங்களால், இந்திய விமானங்கள் பாகிஸ்தானின் ரேடார் கண்காணிப்பில் இருந்து தப்பிவிடும் என்பதால் தாக்குதல் நடத்த அனுமதி அளித்ததாகவும் கூறியிருந்தார். 


Advertisement

பிரதமரின் இந்த பேட்டியை முதலில் ட்விட்டரில் வெளியிட்டிருந்த பாஜக பின்னர் நீக்கிவிட்டது. இந்நிலையில் பிரதமரின் பேச்சு குறித்து கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் சல்மான் அனீஸ், ரேடார் எப்படி செயல்படுகிறது என பிரதமருக்கு யாரும் விளக்கமளிக்கவில்லையா என்றும், இது சிரிப்பதற்குரிய விஷயமல்ல என்றும், தேசிய பாதுகாப்பு சம்பந்தமானது எனவும் தெரிவித்துள்ளார். 

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாரம் யெச்சூரி, இதுபோன்று பொறுப்பற்ற முறையில் பேசும் ஒருவர் பிரதமராக நீடிக்கக் கூடாது என ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement