JUST IN
  • BREAKING-NEWS ‌குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்ற திமுகவின் கோரிக்கையை நிராகரித்தார் சபாநாயகர்
  • BREAKING-NEWS ‌வண்ணாரப்பேட்டை போராட்டத்தில் முதியவர் இறந்ததாக வதந்தி பரப்பி போராட்டத்தை தூண்டிவிட்டுள்ளனர்: முதலமைச்சர் பழனிசாமி
  • BREAKING-NEWS ‌சிஏஏவிற்கு எதிராக சென்னை, மதுரை, நெல்லை உள்ளிட்ட இடங்களில் தொடர்ந்து 4-வது நாளாகப் போராட்டம்

சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுக்க முயன்றவர் கைது

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

கோவில்பட்டியில் ஆபாசம் படம் காட்டி சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுக்க முயன்ற ஜவுளிக்கடை அதிபரை பொது மக்களே பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி 2வது செக்கடித் தெருவைச் சேர்ந்தவர் முருகன்(58). இவர் அப்பகுதியில் ஜவுளிக்கடை நடத்தி வருகிறார். இவர் அதே பகுதியில் உள்ள காம்பவுண்ட் ஒன்றில் குடியிருக்கும் தனது தாய் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது அந்த காம்பவுண்டில் குடியிருக்கும் சிறுமிகள் சிலர் அங்கு விளையாடிக் கொண்டிருந்ததாக தெரிகிறது. முருகன் அந்த சிறுமிகளை தனது தாய் வீட்டிற்குள் அழைத்து, செல்போனில் ஆபாச படங்களை காண்பித்து, பாலியல் தொந்தரவுக்கு முயன்றுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமிகள் இது குறித்து தனது பெற்றோர்களிடம் தெரிவித்துள்ளனர்.

Image result for பாலியல் தொல்லை 

இதனை தொடர்ந்து சிறுமிகளின் பெற்றோர்கள் அவரை பிடிக்க முயன்றுள்ளனர். முருகன் அங்கிருந்தவர்களை தள்ளி விட்டு தப்பியோடியுள்ளார். அப்பகுதி மக்கள் அவரை துரத்தி சென்று பிடித்து கோவில்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். மேலும் சிறுமிகளின் பெற்றோர்கள் அளித்த புகாரின் பெயரில் போலீசார் விசாரணை நடத்தி போக்சோ சட்டத்தின் கீழ் முருகனை கைது செய்தனர். முருகன் இது போன்று வேறு யாரிடமும் தவறாக நடந்துள்ளாரா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.இச்சம்பவம் கோவில்பட்டியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement: