மக்களவை தேர்தலில் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ், டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோர் வாக்களித்தனர்.
மக்களவைக்கு ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடக்கிறது. இதுவரை 5 கட்டங்களாக, 424 தொகுதிகளில் வாக்குப்பதிவு முடிந்துள்ளது. இந்நிலையில் 59 தொகுதிகளில் இன்று ஆறாவது கட்டத்தேர்தல் நடைபெற்று வருகிறது. இதில் உத்தரப்பிரதேசத்தில் அதிகபட்சமாக 14 தொகுதிகளில் தேர்தல் நடைபெறுகிறது. ஹரியானாவில் 10 தொகுதிகளுக்கும் டெல்லியில் 7 தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
பீகார், மத்தியப்பிரதேசம், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் தலா 8 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. ஜார்க்கண்ட்டில் 4 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. தேர்தல் நடைபெறும் 59 தொகுதிகளிலும் 968 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். 10 கோடியே 17 லட்சத்து 82 ஆயிரத்து 472 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.
ஆறாம் கட்டத் தேர்தலுக்காக இந்த 7 மாநிலங்களிலும் ஒரு லட்சத்து 13 ஆயிரத்து 167 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. தேர்தல் அமைதியாக நடைபெற விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. வாக்குப் பதிவு இன்று காலையில் தொடங்கியது. பொதுமக்கள் காலையிலேயே வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர்.
(அதிஷி)
கிழக்கு டெல்லி பாஜக வேட்பாளர் கவுதம் காம்பீர், பழைய ராஜீந்தர் நகர் வாக்குச்சாவடியில் குடும்பத்தினருடன் சென்று காலையிலேயே வாக்களித்தார். இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராத் கோலி, குருகிராமில் உள்ள பின்கிரஸ்ட் பள்ளி வாக்குச்சாவடியில் வாக்களித்தார்.
மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் புதுடெல்லி, என்பி பள்ளியில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார். டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் சிவில் லைனில் உள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கைப் பதிவு செய்தார். கிரிக்கெட் வீரர் கவுதம் காம்பீரை எதிர்த்து போட்டியிடும் ஆம் ஆத்மி வேட்பாளர் அதிஷி, ஜங்புரா பகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார்.
Loading More post
‘உதயசூரியன் சின்னத்தில்தான் போட்டி’ திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 6 தொகுதிகள் ஒதுக்கீடு!
டாப் 5 தேர்தல் செய்திகள் : பாஜக வேட்பாளர் உத்தேச பட்டியல்..பாமகவுக்கு மாம்பழ சின்னம்!
கொளத்தூர் இல்லை.. திருவொற்றியூர் தொகுதியில் சீமான் களமிறங்க வாய்ப்பு
முதலிடத்தில் இந்தியா - டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் நியூசிலாந்துடன் மோதல்!
பாமகவுக்கு மாம்பழம் சின்னம் ஒதுக்கீடு : தேர்தல் ஆணையம்
“6 தொகுதிக்கு கட்டாயப்படுத்தவில்லை; வேண்டுகோள் வைத்தார்கள்” திருமாவளவன் சிறப்பு பேட்டி
ஓவைசி Vs அப்பாஸ் சித்திக்... மேற்கு வங்கத்தில் பாஜகவுக்கு சாதகமா? - ஒரு பார்வை
ராகுல் காந்திக்கு பலப்பரீட்சை: காங்கிரஸின் 'ஜி-23' தலைவர்களால் சிக்கல் ஏன்?
“அவன் அடிச்சதே ஆண்டர்சன் பால்ல தான்யா..” பொளந்து கட்டிய ‘மான்ஸ்டர்’ ரிஷப் பண்ட்!