[X] Close

பிரதமரை இழிவுபடுத்தி பேசுவதா? சித்துவுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்!

Subscribe
Election-Commission-issues-fresh-notice-to-Sidhu

பிரதமர் மோடியை இழிவுபடுத்தும் வகையில் பேசியதாகக் கூறியதையதை அடுத்து, பஞ்சாப் அமைச்சர் நவ்ஜோத் சிங் சித்துவுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.


Advertisement

பஞ்சாப் மாநில அமைச்சரும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவருமான நவ்ஜோத் சிங் சித்து காங்கிரஸுக்கு ஆதரவாக வடமாநிலங்களில் தீவிர பிரசாரம் செய்து வருகிறார். சமீபத்தில் தேர்தல் பிரசாரத்தில் பேசிய இவர், பிரதமர் மோடியை கடுமையாக விமர்சித்தார். ரபேல் ஒப்பந்தத்தில் பிரதமர் பணம் பெற்றார் என்றும் தேசிய வங்கிகளில் கொள்ளையடித்த பணக்காரர்களை நாட்டை விட்டு ஓட அனுமதித்தார் என்றும் விமர்சித் தார். 


Advertisement

இது, பிரதமர் மோடியை இழிவுபடுத்தும் வகையில் அமைந்திருப்பதாக, பாஜக சார்பாக தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதைய டுத்து தேர்தல் ஆணையம், சித்துவிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. 

ஏற்கனவே, பீகார் மாநிலத்தில் சித்து பேசிய பேச்சுக்கு கண்டனம் தெரிவித்த தேர்தல் ஆணையம் 72 மணி நேரம் பிரசாரம் செய்ய தடை விதித் திருந்தது.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் புதிய தலைமுறை இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்க
முக்கியச் செய்திகளை உடனுக்குடன் அறிய, நேர்த்தியான வாசிப்பு அனுபவம் பெற புதிய தலைமுறை ஆப் டவுன்லோடு செய்க >
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close