மக்களவை தேர்தலில் 6ம் கட்ட வாக்குப்பதிவு, நடைபெறும் 59 தொகுதிகளில் ஆளும் பாரதிய ஜனதா கட்சிக்கு மிகப்பெரிய சவாலாக மாறியுள்ளது.
6வது கட்ட தேர்தலை சந்திக்கும் 59 தொகுதிகளில் கடந்த 2014ல் நடந்த தேர்தலில் பாரதிய ஜனதா 44 தொகுதிகளிலும் அதன் கூட்டணிக் கட்சிகள் 2 தொகுதிகளிலும் வென்றிருந்தன. எனவே பாரதிய ஜனதா மீண்டும் ஆட்சியை தக்க வைப்பதில் இந்த 59 தொகுதிகளின் முடிவுகள் முக்கிய பங்கு வகிக்கும் எனக் கூறப்படுகிறது. குறிப்பாக உத்தரப்பிரதேசத்தில் 14 தொகுதிகளும் மிகவும் முக்கியமானதாக உள்ளது.
உத்தரப்பிரதேசத்தில் சமாஜ்வாதி - பகுஜன் சமாஜ் கட்சிகள் வலுவான கூட்டணி அமைத்துள்ளது. ஆனால் காங்கிரஸ் கட்சி வியூக ரீதியாக வேட்பாளர்களை அறிவித்துள்ளது. எனவே பாரதிய ஜனதாவிற்கு இது பெரும் சவாலாக உள்ளது. ஹரியானா மாநிலத்தில் பாரதிய ஜனதா ஆட்சியில் உள்ளதால் அங்கு ஆளும் கட்சிக்கு எதிரான மனநிலை என்ற இயல்பான சவாலை அக்கட்சி எதிர்கொள்ள வேண்டியுள்ளது. இங்கு பெரும்பான்மையாக உள்ள ஜாட் சமூகத்தினர் இட ஒதுக்கீடு விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகள் மீது அதிருப்தியில் உள்ளதாகக் கூறப்படுகிறது. அதே சமயம் ஜாட் வாக்குகளை அதிகம் கவரக் கூடிய இந்திய தேசிய லோக் தளம் கட்சி இரண்டாக உடைந்துள்ளது.இது தங்களுக்கு கைகொடுக்கும் என பாரதிய ஜனதா கணக்கு போடுகிறது.
உத்தரப்பிரதேசத்தை போலவே பீகாரிலும் பாரதிய ஜனதாவிற்கு எதிராக வலுவான கூட்டணி அமைந்துள்ளது. லாலுவின் ராஷ்ட்ரீய ஜனதா தளமும்,காங்கிரசும் அமைத்துள்ள மெகா கூட்டணியில் பல்வேறு சிறு கட்சிகளும் இடம் பெற்றுள்ளன. நிதிஷ் குமார் மற்றும் ராம்விலாஸ் பஸ்வானின் கட்சிகள் துணையோடு இங்கு களமிறங்கினாலும் பாரதிய ஜனதா எதிர்கொள்ள வேண்டிய சவால் கடுமையாக இருக்கும் என்றே தெரிகிறது.
மேற்கு வங்கத்தில் வாக்குப்பதிவு நடக்கும் 8 தொகுதிகளும் திரிணாமுல் காங்கிரஸ் கடந்த முறை வென்ற தொகுதிகளாகும். பிற மாநிலங்களில் ஏற்படும் இழப்பை, மேற்கு வங்கத்தில் ஓரளவு சரிக்கட்ட முனைப்பு காட்டுகிறது. அதனால் பாரதிய ஜனதாவிற்கு இந்த தொகுதிகளை கைப்பற்றுவது மிக முக்கியமானதாக உள்ளது. தலைநகர் டெல்லியைப் பொறுத்தவரை இங்குள்ள 7 தொகுதிகளிலும் பாரதிய ஜனதா கடந்த முறை வென்றிருந்தது. இந்நிலையில் தற்போது ஆம் ஆத்மியும் காங்கிரசும் தனித்து களமிறங்குவதை தனக்கு மிகப்பெரிய பலமாக பாரதிய ஜனதா பார்க்கிறது. அதே சமயம் கடந்த முறை வென்ற 7 தொகுதிகளும் கிடைக்குமா என்ற பெரிய கேள்விக்குறியும் எழுந்துள்ளது.
Loading More post
'நல்ல நாள்', 'சமூக நீதி' - முதற்கட்ட வேட்பாளர் பட்டியல்... அதிமுக 'முந்தியது' ஏன்?
திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 6 தொகுதிகள் ஒதுக்கீடு!
கூட்டணிக் கட்சிகள் கேட்கும் இடங்களை எல்லாம் கொடுத்துவிட முடியாது -ஆர்.எஸ்.பாரதி
ஒதுங்கிய சசிகலா... தேர்தலில் எடுபடுமா தினகரன் வசமுள்ள 3 வியூகங்கள்?!
வாஷிங்டன் சுந்தர் அரை சதம் - 2ம் நாள் முடிவில் இந்திய அணி 294 ரன்கள் குவிப்பு
'நல்ல நாள்', 'சமூக நீதி' - முதற்கட்ட வேட்பாளர் பட்டியல்... அதிமுக 'முந்தியது' ஏன்?
கேரளாவில் கட்சி மாறும் நிர்வாகிகள்... சமூக நீதியை உறுதிப்படுத்த தவறியதா காங்கிரஸ்?!
ஒதுங்கிய சசிகலா... தேர்தலில் எடுபடுமா தினகரன் வசமுள்ள 3 வியூகங்கள்?!
அப்பாஸ் சித்திக்: மேற்கு வங்க அரசியலின் புது வரவு... யாருக்கு லாபம்?