தன் மீது அவதூறு பரப்பியதற்கு மன்னிப்பு கேட்குமாறு டெல்லி முதல்வர் கெஜ்ரிவால், துணை முதல்வர் சிசோடியா, கிழக்கு டெல்லி ஆம் ஆத்மி பெண் வேட்பாளர் அதிஷி ஆகியோருக்கு கவுதம் கம்பீர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக அறிவிக்கப்பட்டு, 5 கட்ட மக்களவைத் தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது. இன்னும் இரண்டு கட்ட மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது. டெல்லியில் மே 12-ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளதால் இறுதிகட்ட பரப்புரை சூடுபிடித்துள்ளது. கிழக்கு டெல்லி மக்களவைத் தொகுதியில் பாஜக சார்பில் கவுதம் காம்பீர் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து ஆம் ஆத்மி கட்சி வேட்பாளரான அதிஷி போட்டியிடுகிறார்.
இந்நிலையில், தனது மாண்பைக் குலைக்கும் வகையில் பாரதிய ஜனதா வேட்பாளரும், கிரிக்கெட் வீரருமான கம்பீர் நோட்டீஸ்களை வெளியிட்டதாக செய்தியாளர் சந்திப்பில் அதிஷி கண்ணீர் மல்க குற்றம்சாட்டினார். கவுதம் காம்பீர் விநியோகித்த துண்டு பிரசுரத்தில், தன்னைப் பற்றி மிக மோசமாக அவதூறு பரப்பியதாகவும், தன் ஒழுக்கப் பண்புகள் குறித்து மிகுந்த மோசமான வகையில் அவதூறு வார்த்தைகளுடன் சித்தரித்துள்ளதாகவும் தெரிவித்தார்.
இந்த குற்றச்சாட்டுக்கு பதில் அளித்துள்ள கம்பீர், தேர்தலில் வெல்வதற்கான கெஜ்ரிவால் கட்சியின் கீழ்த்தரமான வழி இது எனத் தெரிவித்துள்ளார். மேலும் குற்றச்சாட்டை நிரூபித்தால் போட்டியிலிருந்து விலகுவதாகவும் அறிவித்தார். அதேநேரம் குற்றச்சாட்டு பொய் என்றால் கெஜ்ரிவால் அரசியலில் இருந்து விலகத் தயாரா என்றும் கம்பீர் சவால் விடுத்திருந்தார். இந்நிலையில், தன் மீது அவதூறு பரப்பியதற்காக மன்னிப்பு கேட்குமாறும் மறுத்தால் வழக்கு தொடரப்படும் என்றும் கெஜ்ரிவால், சிசோடியா, அதிஷி ஆகியோருக்கு கவுதம் கம்பீர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
Loading More post
தேவேந்திரகுல வேளாளர் மசோதாவிற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல்!
கொரோனா பரவலை குறைக்க 10 முக்கிய வழிகள்: மருத்துவர் பிரதீப் கவுர் வழிகாட்டுதல்
மகாராஷ்டிராவில் அடுத்த 15 நாட்களுக்கு ஊரடங்கு: முதல்வர் உத்தவ் தாக்கரே அறிவிப்பு
வேளச்சேரி வாக்குச்சாவடி எண் 92-இல் ஏப்.,17ம் தேதி மறுவாக்குப்பதிவு
ஈ.வெ.ரா. சாலை பெயர் பலகை சர்ச்சை: விளக்கமளித்த நெடுஞ்சாலைத்துறை மண்டலப் பொறியாளர்
சத்தீஸ்கரில் மாவோயிஸ்டுகள் ஆதிக்கம் மிகுந்திருப்பதின் பின்புலம் என்ன? - ஒரு பார்வை
கும்பமேளா: கங்கையில் புனித நீராடல்... கொரோனா 'கவலை' அதிகரிப்பது ஏன்?
2-ம் அலை தீவிரம்: சீரம், பாரத் பயோடெக் நிறுவன கொரோனா தடுப்பூசி உற்பத்தி நிலவரம் என்ன?
கோடை காலத்தில் உடற்பயிற்சி செய்கிறீர்களா? இவற்றையெல்லாம் கவனியுங்கள்!