[X] Close >

“ஏழு பேர் விடுதலைக்கு ஆளுநர் ஆணை பிறப்பிக்க வேண்டும்” - ஸ்டாலின்

MK-Stalin-request-TN-governor-for-7-Release

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேரை உடனடியாக விடுதலை செய்ய ஆளுநர் ஆணை பிறப்பிக்க வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.


Advertisement

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரின் விடுதலைக்கு எதிரான வழக்கை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளதை வரவவேற்பதாக தெரிவித்துள்ளார். 7 பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என்று தமிழக அமைச்சரவை சார்பில் ஏற்கெனவே தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டியுள்ளார். ஆனால் மனித நேயத்தின் அடிப்படையில் முடிவு எடுக்கும் அதிகாரம் பெற்றுள்ள ஆளுநர் கடந்த 8 மாதங்களாக தமிழக அமைச்சரவை தீர்மானத்தின் மீது உரிய காலத்தில் உத்தரவு பிறப்பிக்காமல் தாமதப்படுத்தி வருவதாக தெரிவித்துள்ளார்.


Advertisement

தற்போது  7 விடுதலை பேரின் விடுதலைக்கு எதிரான மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டததால், தமிழக அரசின் தீர்மானத்தை ஏற்றுக்கொண்டு உடனடியாக 7 பேரை விடுதலை செய்ய வேண்டும் என ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இனியும் காலம் தாழ்த்தினால், இட்டுக்கட்டிய பிரச்னைகள் எழக்கூடும் என்பதை ஆளுநருக்கு சுட்டிக்காட்ட விரும்புவதாகவும் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close