காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மீது, பிரிட்டன் குடியுரிமை தொடர்பாகத் தொடரப்பட்ட வழக்கை உச்சநீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது.
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, இந்தியா மட்டுமின்றி பிரிட்டிஷ் குடியுரிமை பெற்று ஒரு நிறுவனத்தின் இயக்குநராக, பதவி வகித்து வருகிறார் என்று சுப்பிரமணியன் சுவாமி புகார் தெரிவித்திருந்தார். இந்தப் புகாரை அவர் மத்திய உள்துறை அமைச்சகத்திற்கும் கடந்த 2017ஆம் ஆண்டு அளித்தார். அந்தப் புகார் குறித்து 15 நாட்களுக்குள் விளக்கம் அளிக்கும்படி ராகுல் காந்திக்கு உள்துறை அமைச்சகம் கடந்த மாதம் 30ஆம் தேதி நோட்டீஸ் அனுப்பியது.
இந்நிலையில் குடியுரிமை பிரச்னையால் அவர் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கு தடை விதிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், வழக்குக்கான முகாந்திரம் ஏதும் இல்லை என்று கூறி மனுவைத் தள்ளுபடி செய்தது. அதோடு, வழக்கு விசாரணையின் போது, இதற்கான ஆவணம் எங்கே என்று கேட்ட நீதிமன்றத்திடம், இங்கிலாந்தில் ஒரு நிறுவனத்தில் பங்குதாரராக இருக்கும் ஆவணங்கள் இருப்பதாக மனுதாரர் தெரிவித்தார்.
அப்போது, ’ஏதோ ஒரு காகிதத்தில் ஒருவரின் பெயர் இருப்பதால் அவர் அந்நாட்டின் குடியுரிமை பெற்றவராக ஆகிவிடுவாரா? இவ்வளவு அரசு அமைப்புகள் இருந்தும் அவரது குடியுரிமையை கவனிக்காமல் விட்டுவிடுவார்களா? என்றும் கேள்வி எழுப்பி, மனுவைத் தள்ளுபடி செய்தது.
ஏற்கெனவே 2015ஆம் ஆண்டு உச்சநீதிமன்றத்தில் ராகுலின் குடியுரிமை குறித்து சிபிஐ விசாரிக்க வேண்டும் எனப் பொதுநல வழக்கு தொடரப் பட்டது. அந்த வழக்கில் தாக்கல் செய்யப்பட்ட ஆதரங்களில் உண்மை தன்மையில்லை எனக் கூறி உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்ததிருந்தது குறிப்பிடத்தக்கது.
Loading More post
புதுச்சேரி: காங்கிரசில் இருந்து அமைச்சர் நமச்சிவாயம் தற்காலிக நீக்கம்!
“சீனா என்ற வார்த்தையை சொல்லக்கூட தைரியமற்றவர் பிரதமர் மோடி” - ராகுல் காந்தி
ராமர் பாலம் எப்போது, எப்படி உருவானது? - கடலுக்கடியில் ஆய்வு செய்ய மத்திய அரசு ஒப்புதல்!
திமுக ஆட்சி அமைந்ததும் 100 நாட்களில் மக்களின் பிரச்னைகளுக்கு தீர்வு : மு.க.ஸ்டாலின்
சிக்கிம் எல்லையில் சீன ராணுவம் ஊடுருவல் முயற்சி: இந்திய ராணுவம் முறியடிப்பு
PT Exclusive: சசிகலாவிற்கு 100% இடமில்லையென கூறியது ஏன்? - நேர்காணலில் முதல்வர் விளக்கம்
PT Exclusive: ''களத்தில் இருப்பது அதிமுகவும், திமுகவும்தான்''- முதல்வர் பழனிசாமி நேர்காணல்
கண்ணான கண்ணே.. மகள்களுடன் புகைப்படங்களை பகிரும் பிரபலங்கள்
திரையும் தேர்தலும் 2 - ராஜாஜி Vs அண்ணா, எம்.ஜி.ஆர் + கருணாநிதி!