ஷார்ஜாவில் நெருப்பு பற்றிய கப்பலில் இருந்து 13 இந்தியர்களை மீட்கபட்டுள்ளனர்.
ஷார்ஜாவின் காலித் துறைமுகத்தில் உள்ள கப்பல் ஒன்றில் இன்று தீ விபத்து ஏற்பட்டது. உள்ளூர் நேரப்படி காலை 6 30 மணியளவில் இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அந்தக் கப்பலில் 6000 கேலன்கள் கொண்ட டீசல், 120 ஏற்றுமதி வாகனங்கள் மற்றும் 300 வாகன டயர்கள் ஆகியவை இருந்தன. தீ வேகமாக கப்பலில் பரவியது. கப்பலில் தீ கொளுந்துவிட்டு எரிந்தது.
இதனையடுத்து அங்கு வந்த தீயனைப்பு துறையினர் கடுமையாக போராடி தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர். அத்துடன் கப்பலில் மாட்டிக் கொண்டிருந்த 13 இந்தியர்களை பத்திரமாக மீட்டனர். இந்த தீ விபத்தில் உயிர் சேதம் எதுவும் இன்றி தீயை அணைத்தனர். அதேபோல மீட்கப்பட்ட அனைவருக்கும் முதலுதவி மற்றும் தேவையான உணவு ஆகிய வழங்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தீயணைப்பு துறை அதிகாரி, “எங்களுக்கு சரியாக காலை 6.44 மணியளவில் தகவல் கிடைத்தது. இதனையடுத்து நாங்கள் சம்பவ இடத்தை ஐந்து நிமிடத்தில் அடைந்தோம். அதன்பின்னர் கொழுந்துவிட்டு எரிந்த தீயை கட்டுக்குள் கொண்டுவர முயற்சி செய்தோம். ஒரு மணி நேரம் போராட்டத்திற்கு பிறகு தீயை அணைத்தோம். அத்துடன் கப்பலில் இருந்த 13 பேரை மீட்டு அவர்களை பத்திரமாக வெளியே கொண்டு வந்தோம்” எனத் தெரிவித்தார்.
Loading More post
சசிகலா உடல்நிலையில் முன்னேற்றம் - சாதாரண வார்டுக்கு மாற்ற முடிவு
PT Exclusive: சசிகலாவிற்கு 100% இடமில்லையென கூறியது ஏன்? - நேர்காணலில் முதல்வர் விளக்கம்
சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி: போராட்டக்களத்தில் தொடரும் வகுப்புகள்!
"எங்கள் உள்நாட்டு விவகாரத்தில் தலையிடாதீர்கள்" - அமெரிக்காவுக்கு ரஷ்யா எச்சரிக்கை
PT Exclusive: ''களத்தில் இருப்பது அதிமுகவும், திமுகவும்தான்''- முதல்வர் பழனிசாமி நேர்காணல்
PT Exclusive: ''களத்தில் இருப்பது அதிமுகவும், திமுகவும்தான்''- முதல்வர் பழனிசாமி நேர்காணல்
கண்ணான கண்ணே.. மகள்களுடன் புகைப்படங்களை பகிரும் பிரபலங்கள்
திரையும் தேர்தலும் 2 - ராஜாஜி Vs அண்ணா, எம்.ஜி.ஆர் + கருணாநிதி!
9 கிமீ நீளம்; 40 மாடி கட்டிடம் கட்டுமளவு வானளாவிய உயரம்; சன் டூங் குகையின் ஆச்சரிய படங்கள்
பூமி, சூரரைப் போற்று, சில புரிதல்கள்.. 'கார்ப்பரேட்' கழுவியூற்றப்படுவது எந்த அளவுக்கு சரி?