தோள்பட்டையில் காயம்: உலகக்கோப்பையில் இருந்து வெளியேறிய ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

பயிற்சியின் போது ஏற்பட்ட காயம் காரணமாக ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் ஜய் ரிச்சர்ட்சன் உலக கோப்பைக்கான  அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்


Advertisement

மே மாத இறுதியில் உலகக்கோப்பை போட்டிகள் தொடங்கவுள்ள நிலையில், தொடரில் பங்கேற்கு நாடுகளின் அணி வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தியாவில் ஐபிஎல் நடைபெற்று வருவதால் வெளிநாட்டு வீரர்கள் பலரும் இந்தியாவில் இருக்கின்றனர். ஐபிஎல் தொடரில் இருந்து வெளியேறிய அணியின் வெளிநாட்டு வீரர்கள் பலரும் தங்கள் சொந்த நாடுகளுக்கு திரும்புகின்றனர். 


Advertisement

உலகக்கோப்பையை பொறுத்தவரை எல்லா அணிகளும் சமமான பலத்துடன் உள்ளன. குறிப்பாக ஆஸ்திரேலியா, இந்தியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா உள்ளிட்ட அணிகள் பெரிதும் எதிர்ப்பார்க்கப்படுகின்றன. ஆஸ்திரேலிய அணி ஆரம்பத்தில் சற்று தடுமாறியது. ஆனால் தற்போது ஸ்மித், வார்னர் மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளது பலமாகவே பார்க்கப்படுகிறது. 

பந்துவீச்சிலும் ஆஸ்திரேலிய முழுக்கவனம் செலுத்தி வருகிறது. இந்நிலையில் ஆஸ்திரேலிய அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளரான ஜய் ரிச்சர்ட்சனுக்கு பயிற்சியின் தோள்பட்டையில் காயம் ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. காயம் காரணமாக அவர் உலக கோப்பைக்கான ஆஸ்திரேலிய அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார் என்றுன் அவருக்கு பதிலாக கேன் ரிச்சர்ட்சன் அணியில் சேர்க்கப்பட உள்ளதாகவும் ஐசிசி தெரிவித்துள்ளது.


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement