டெல்லியில் ராகுல்காந்தியுடன் சந்திரபாபு நாயுடு சந்திப்பு

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

டெல்லியில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியை ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு சந்தித்து பேசினார்.


Advertisement

மத்தியில் பாஜக மற்றும் காங்கிரஸ் அல்லாத மூன்றாவது அணி ஆட்சி அமைக்க தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர் ராவ் முயற்சி மேற்கொண்டு வருகிறார். தேர்தல் முடிவுக்கு பின் மூன்றாவது அணியால்தான் ஆட்சி அமைக்க முடியும் என்ற நம்பிக்கையிலும் அவர் உள்ளார். அதன்பொருட்டு கேரள முதலமைச்சர் பினராயி விஜயனை அவர் திருவனந்தபுரத்தில் நேற்று முன்தினம் சந்தித்து பேசினார். இதேபோல திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்திக்க சந்திரசேகர் ராவ் தரப்பில் முயற்சி மேற்கொள்ளப்பட்டதாகவும், இடைத்தேர்தல் பரப்புரையில் இருப்பதால் ஸ்டாலின் தரப்பில் அதற்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டதாகவும் கூறப்பட்டது. இதுமட்டுமின்றி கர்நாடகா முதலமைச்சர் குமாரசாமியுடனும், சந்திரசேகர் ராவ் தொலைபேசியில் உரையாடியுள்ளார்.


Advertisement

இந்நிலையில் டெல்லியில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியை ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு சந்தித்து பேசியுள்ளார். மூன்றாவது அணிக்கு சந்திரசேகர் ராவ் முயற்சித்து வரும் நிலையில், காங்கிரஸ் கூட்டணிகள் செய்ய வேண்டியவை என்னென்ன என்பது குறித்து இருவரும் ஆலோசித்ததாக கூறப்படுகிறது.

loading...

Advertisement

Advertisement

Advertisement