வேலூரில் நேற்று மதியம் கடத்தப்பட்ட தனியார் நிதி நிறுவன உரிமையாளர் 8 மணி நேரத்தில் காவல் துறையினரால் மீட்கப்பட்டார்.
வேலப்பாடி பகுதியை சேர்ந்த நந்தகுமார், தனியார் நிதி நிறுவனத்தை நடத்தி வந்ததாகக் கூறப்படுகிறது. இவர் தனது அலுவலகத்தில் இருந்தபோது 5 பேர் கொண்ட கும்பல் கடத்திச் சென்றது. சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில், இருசக்கர வாகனத்தில் நந்தகுமார் கடத்தப்பட்டது தெரியவந்தது. இதுதொடர்பாக புகார் அளித்த நந்தகுமாரின் உறவினர்கள், கடத்திச் சென்றவர்கள் பணம் கேட்டு மிரட்டுவதாக கூறினர்.
புகாரையடுத்து நேரில் சென்று விசாரணை மேற்கொண்ட எஸ்பி பிரவேஷ்குமார், டிஎஸ்பி பாலகிருஷ்ணன் தலைமையில் 3 தனிப்படை அமைத்து உத்தரவிட்டார். அதனையடுத்து கடத்தப்பட்ட நந்தகுமார் 8 மணி நேரத்திற்கு பிறகு இரவு 10 மணியளவில் ஆற்காடு அடுத்த மேல்விஷாரம் தேசிய நெடுஞ்சாலையில் மீட்கப்பட்டார். காவல் துறையினரின் வாகன தணிக்கையில் சிக்கிக் கொண்டதால், கடத்தல்காரர்கள் நந்தகுமாரை விட்டுவிட்டு தப்பியோடிவிட்டனர்.
Loading More post
நடிகர் விவேக்குக்கு மாரடைப்பு - தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதி
நிபுணத்துவம் இல்லாத அதிகாரிகளை தீர்ப்பாயங்களில் நியமிப்பதா? - உயர்நீதிமன்றம் அதிருப்தி
இந்தியாவில் இருந்து வெளியேறுகிறது 'சிட்டி பேங்க்' - சேவையில் பாதிப்பு இல்லை... ஏன்?
இந்தியா: ஒரே நாளில் 2.17 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று
கொரோனா கட்டுப்பாடுகளுடன் பிளஸ் 2 மாணவர்களுக்கான செய்முறை தேர்வு தொடக்கம்!
இந்தியாவில் இருந்து வெளியேறுகிறது 'சிட்டி பேங்க்' - சேவையில் பாதிப்பு இல்லை... ஏன்?
டாஸ் வென்றால் பீல்டிங் தேர்வு... தப்புக் கணக்கு போடும் அணிகள்... மாறும் முடிவுகள்!
கோவாக்சின் Vs கோவிஷீல்டு Vs ஸ்புட்னிக்-வி: கொரோனா தடுப்பூசிகளின் வேறுபாடுகள்- ஒரு பார்வை
கடும் கொரோனா பாதிப்பைக் குறைக்க உதவும் தினசரி உடற்பயிற்சி: ஆய்வும் வழிகாட்டுதலும்