ஐபிஎல் பார்க்க வந்த மாற்றுத்திறனாளி மனதை காயப்படுத்திய சென்னை போலீஸ்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஐபிஎல் பார்க்க மாற்றுத்திறனாளி ரசிகர் ஒருவரின் மனது காவல்துறையினரால் வருத்தமடைந்துள்ளது. 


Advertisement

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தோல்வி அடைந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் இதற்கிடையே மேலும், ஒரு சோகமான சம்பவம் நிகழ்ந்துள்ளது. 


Advertisement

கிரிக்கெட் போட்டியை முதல் முறை நேரடியாக காண சென்னை சேப்பாக்கம் மைதானத்திற்கு வந்துள்ளார் மாற்றுத்திறனாளி ரசிகர் தீபக் நாதன். இவரிடம் டிக்கெட் இருந்தும் அவரால் கிரிக்கெட்டை பார்க்க முடியவில்லை. ஏனென்றால் மைதானத்திற்குள் கார் பார்க்கிங் வசதியில்லை. இதனால் காரில் அவரால் உள்ளே செல்ல முடியவில்லை. இதனால் காரில் இருந்து இறங்கி, தான் ஒரு மாற்றுத்திறனாளி என காவல்துறையினரிடம் கூறியுள்ளார். இருப்பினும் காரை உள்ளே கொண்டு செல்லமுடியாது என கான்ஸ்டபிள் ஒரு பொறுமையுடன் விளக்கம் அளிக்க, அங்கு பணியின் உதவி ஆணையர், ‘அவன போவ சொல்லுயா’ என்று மரியாதை குறைவாக பேசியுள்ளார். அதற்கு தீபக், ‘நான் ஊனமுற்றவர்’ என்று கூற, ‘அதுக்கு என்னயா?’ என்று மீண்டும் சத்தம்போட்டு பேசியுள்ளார் உதவி ஆணையர். பின்னர் தீபக் ‘நான் ஒரு குடிமகன்’ என்று கூற, ‘எல்லாவனும் தான்’ என அலட்சியமாக பேசியிருக்கிறார் அதிகாரி. 

இதனால் மனம் உடைந்த தீபக் வீடு திரும்பியுள்ளார். பின்னர் தனக்கு நேர்ந்த அவமதிப்பை ஃபேஸ்புக்கில் பகிர்ந்துள்ள அவர், “நான் முதல் முறை மைதானத்திற்கு போட்டியை காண வந்தேன். அந்த காவல்துறை அதிகாரின் அவமதிப்பால் டிக்கெட் இருந்தும் போட்டியை காணாமல் வீட்டிற்கு வந்துவிட்டேன். இனி எப்போதும் கிரிக்கெட் பார்க்க போகமாட்டேன். என்னைப் போன்ற மாற்றுத்திறனாளிகளுக்கு தனி பார்க்கிங் ஏற்பாடு செய்ய வேண்டாமா ? நான் என்ன செய்வது சொல்லுங்க ?” என்று உருக்கமாக பதிவிட்டுள்ளார். 


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement