JUST IN

Advertisement

 “துரியோதனன் போல் மோடி ஆணவத்தில் இருக்கிறார்” - பிரியங்கா தாக்கு

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

உத்தரப்பிரதேச கிழக்குப் பகுதியின் காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி தேர்தல் பரப்புரையின்போது மோடியை துரியோதனன் எனக் கிண்டலாக பேசியுள்ளார்.


Advertisement

நாடாளுமன்றத் தேர்தலின் 5ஆம் கட்ட வாக்குப்பதிவு நேற்று நடைபெற்று முடிந்தது. இன்னும் 2 கட்ட வாக்குப்பதிவுகளே மீதமுள்ள நிலையில் தேர்தல் களம் இறுதிகட்டத்தை அடைந்துள்ளது. இதனையடுத்து பல கட்சித் தலைவர்கள் ஒருவருக்கு ஒருவர் குற்றஞ்சாட்டி வருகின்றனர். அந்த வகையில் காங்கிரஸ் கட்சியின் உத்தரப்பிரதேச கிழக்குப் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி ஹரியானாவில் தேர்தலின் போது மோடியை கிண்டலாக விமர்சித்துள்ளார். 


Advertisement

அதில் அவர், “மோடி ஒரு  துரியோதனை போன்றவர். ஏனென்றால் அவர் துரியோதனை போன்று அதிக ஆணவத்துடன் இருக்கிறார். இதுவே அவரது தோல்விக்கு முக்கிய காரணமாக அமையும். அத்துடன் பாஜக தலைவர்கள் அவர்கள் கொடுத்த வாக்குறுதிகளைப் பற்றி பேசாமல் தியாகிகள் மற்றும் அவர்களது குடும்பங்களை பற்றி பேசி வாக்கு சேகரித்துவருகின்றனர். மகாபாரதத்தில் துரியோதனின் ஆணவம் குறித்து அவருக்கு உணர்த்த கிருஷ்ணண் முற்பட்டார். ஆனால் துரியோதனன் கிருஷ்ணரை பிடிக்க வேண்டும் என நினைத்தார். அது அவரின் அழிவின் தொடக்கமாக இருந்தது. அதேபோல பிரதமர் மோடியின் ஆணவம் அவரின் தோல்விக்கு தொடக்கமாக அமையும்” எனத் தெரிவித்தார். 

இதற்குப் பதலளிக்கும் விதமாக பாஜக தேசிய தலைவர் அமித் ஷா, “ஜனநாயகத்தில் யாரும் துரியோதனனாக இருக்க முடியாது. பிரியங்கா கூறியதால் மோடி துரியோதனனாக முடியாது. அத்துடன் மே 23ஆம் தேதி யார் துரியோதனன்? யார் அர்ஜுனன்? என்பது தெரிந்துவிடும்”எனக் கூறியுள்ளார்.


Advertisement

முன்னதாக கடந்த சனிக்கிழமை உத்தரப்பிரதேசத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி, “ராஜீவ் காந்தி ஊழல்வாதி நம்பர் 1” எனப் பேசினார். இது அரசியல் களத்தில் பெரும் எதிர்ப்பை கிளப்பியது. இதுகுறித்து மோடி மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று காங்கிரஸ் கட்சி தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement