சிதம்பரம் அருகே ஓரே கிராமத்தைச் சேர்ந்த மூதாட்டி உட்பட 30க்கும் மேற்பட்டோரை குரங்கு கடித்ததால் அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சம் ஏற்பட்டுள்ளது.
சிதம்பரம் அருகே உள்ளது வடக்குமாங்குடி கிராமம். இக்கிராமத்தில் ஏராளமான குரங்குகள் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து தினமும் அட்டகாசம் செய்து வருகிறது. கடந்த சில வாரங்களாக இந்த கிராமத்திற்குள் ஏராளமான குரங்குகள் கூட்டமாக புகுந்து அட்டகாசம் செய்து வருவதாகவும், வீடுகளுக்குள் புகுந்து பொருள்களை நாசம் செய்வதாகவும், சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் குரங்குகள் கடித்து குதறுவதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் தற்போது இதே கிராமத்தைச் சேர்ந்த நாகாயாள்(60) என்கிற மூதாட்டியை குரங்கு கடித்தது. இதனால் தலையில் பலத்த காயமடைந்த அவரை கிராம மக்கள் உடனடியாக சிதம்பரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்தச் சூழலில் கிராமத்தில் உள்ள குரங்குகளை பிடித்து காட்டுப் பகுதியில் விட வேண்டும் என வடக்குமாங்குடி கிராம மக்கள் வனத்துறைக்கு தொடர்ச்சியாக கோரிக்கை விடுத்தும், வனத்துறை அதற்கான முயற்சிகளில் ஈடுபடாமல் அலட்சியப்படுத்துவதாக குற்றம் சாட்டுகின்றனர். மேலும் குரங்குகளை பிடிக்க வனத்துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்காவிட்டால், வடக்குமாங்குடி கிராமத்தை விட்டு குடும்பம் குடும்பமாக வெளியேறுவோம் என கிராம மக்கள் எச்சரித்து உள்ளனர்.
Loading More post
“வன்னியர்களுக்கான இடஒதுக்கீடுதான் பாமக குறைவான தொகுதிகளை பெறக்காரணம்” - அன்புமணி பேட்டி
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்!
அரசு பஸ் ஊழியர்களின் வேலைநிறுத்தம் வாபஸ்
"அதிகாரம், பண பலத்திற்கு முன்னால் யாராலும் தாக்கு பிடிக்க முடியாது" - ராகுல் காந்தி
தமிழக தேர்தல்: முடிவானது அதிமுக - பாமக தொகுதி பங்கீடு!
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?
கவுன்டவுனை தொடங்கிய கமல்: மூன்றாம் அணி இலக்கை நெருங்குகிறதா மக்கள் நீதி மய்யம்?
குழந்தைகளுக்கு தேவையான 'வைட்டமின் டி' உடலில் சேருவதை உறுதிசெய்வது எப்படி? - ஒரு வழிகாட்டி