[X] Close >

நிச்சயதார்த்த நிகழ்ச்சியை லண்டனில் கொண்டாடிய எமி ஜாக்சன்  

Pregnant-Amy-Jackson-and-boyfriend-George-Panayiotou-get-engaged-in-London

சென்னையின் க்ளைமேட் செம ஹாட்டா இருக்கிறது. ஆனால் நடிகை எமி ஜாக்சன் லண்டனில் தன் நிச்சயதார்த்த நிகழ்ச்சியை செம கூலாக கொண்டாடிக் கொண்டு இருக்கிறார். ஆமாங்க! நடிகை எமி ஜாக்சனுக்கு லண்டனில் முறைப்படி கல்யாணம் நிச்சயமாகி இருக்கிறது. இந்தச் செய்தியை அவர் தனது இன்ஸ்டாகிராம் மூலம் தெரியப்படுத்தி இருக்கிறார். 


Advertisement

தமிழ் சினிமாவில் நடிகையாக இருந்தாலும் எமி, எப்போதுமே மாடர்ன் நடிகைதான். தமிழில் அவர் கலாச்சார வரம்பை மீறாத நடிகையாக வலம் வந்தாலும், இந்தியில் அவர் க்ளாமர் நடிகையாகவே நடித்து வந்தார். பாலிவுட் மார்க்கெட் கலாச்சாரத்தில் அதிக கவர்ச்சியாக தன்னை வெளிப்படுத்தி கொண்ட எமி, லண்டன் மாடலிங் உலகில் படு கவர்ச்சியான நடிகையாக தன்னை வெளிப்படுத்தி கொண்டார். இது குறித்து அவரிடம் கேள்வி எழுப்பிய போதெல்லாம், “என் லண்டன் கலாச்சரத்தில் இந்தக் கவர்ச்சி எல்லாம் மிக இயல்பானது” எனத் தயக்கமே இல்லாமல் பதிலளித்தார். ‘பிகினி’ உடை சர்ச்சை குறித்து அவர் அதன் பின் கவலையே கொள்ளவில்லை.


Advertisement

லண்டன் நடிகையான எமி, தமிழில் நடித்த படங்கள் அனைத்து அவருக்கு நல்ல பெயரையே சம்பாதித்து கொடுத்தன. அவர் அறிமுகமான ‘மதராசபட்டினம்’ படமே அவரது சிறப்பான நடிப்பை உணர்த்தியது. அதனை அடுத்து அவர் நடிப்பில் வெளியான ‘தாண்டவம்’,‘ஐ’,‘தங்க மகன்’,‘தெறி’, ‘2.0’ என சகலமும் அவரை நல்ல நிலையிலேயே நிலை நிறுத்தி வைத்திருந்தன. அவர் தமிழில் அறிமுகமாகி இருந்தாலும் அவரது comfortable zone பாலிவுட் ஆகவே இருந்தது. அங்கே அவர் தனது காதலர் ஜார்ஜூடன் மிக வெளிப்படையாக வலம் வந்தார். அங்கு அவர் இந்திய நடிகைகள் போல ஒளிவு மறைவாக காதலிக்கவில்லை. ஓபனாக தன் காதலரை பொதுவெளிக்கு அறிமுகம் செய்தார். காதல் என்பது வாழ்க்கையில் ஒரு அங்கம்தான் என அவர் இயல்பாக அதை எடுத்து கொண்டது அவரது இந்தச் செயல்கள் உணர்த்தின. 

இந்நிலையில்தான் அவர், இந்தப் புத்தாண்டு விடுமுறையை கிழக்கு ஆப்பிரிக்காவில் உள்ள ஜாம்பியா நாட்டில் கொண்டாடினர். அதற்கான புகைப்படங்கள் இன்ஸ்டாகிராமில் வெளியானது. சாகசமான காட்டுப் பயணம், யானை உள்ளிட்ட விலங்குளுடன் உற்சாமாக செல்ஃபி என அந்தப் படங்கள் அவரது அட்வென்ஞ்சர் வாழ்க்கையை எடுத்து காட்டின. 

எமி, உண்மையிலேயே ஒரு சாகச விரும்பி. லண்டனில் அவர் குதிரையேற்றம் உள்ளிட்ட சில சாகச பயிற்சிகளில் ஈடுப்பட்டவர். ஆகவே அவருக்கு இந்த ஆப்பிரிக்க காட்டுப் பயணம் புதிய தெம்பை கொடுத்தது. இந்த எல்லா சாகச விளையாட்டிலும் அவரது காதலர் ஜார்ஜ் உடன்தான் அவர் இருந்தார். அவருடன் எடுத்து கொண்ட ‘லிப்லாக்’ புகைப்படமும் வெளியாகி வைரலானது. மேலும் இப்பயணம் குறித்து, “2019-ம் ஆண்டின் ஜனவரி முதல் நாள். நம்முடைய வாழ்க்கையில் சாகசம் தொடங்கி இருக்கிறது. நான் உன்னைக் காதலிக்கிறேன். இந்த உலகத்திலேயே மிக சந்தோஷமான பெண்ணாக என்னை மாற்றியதற்கு நன்றி” என்றும் செய்தி போட்டார் எமி.


Advertisement

இந்தப் புகைப்படங்களை பார்த்து பதறிப்பேன தமிழ் ரசிகர்களின் அதிர்ச்சி அடங்குவதற்கு முன்பே எமி, இன்னொரு அதிர்ச்சி தகவலை மிகச் சாதாரணமாக பகிர்ந்து கொண்டார். திருமணம் செய்துகொள்வதற்கு முன்னரே, எமி ஜாக்சன் கர்ப்பமாக இருப்பதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரித்தார். மேலும் அவர்  “தாய்மை அடைந்திருக்கிற இந்தத் தருணத்தை என் வீட்டு மாடியில் நின்று சத்தமாக சொல்ல வேண்டும் போல் இருக்கிறது. இந்த உலகத்தில் எதையும் விட, உன் மீதுதான் தூய்மையான, நேர்மையான காதல் உள்ளது. எங்கள் குழந்தையை பார்க்க, பொறுத்திருக்க முடியவில்லை” என்று கூறினார்.

இந்நிலையிதான் லண்டனில், அவரது நிச்சயதார்த்தம் நேற்று நடைபெற்றுள்ளது. அதற்கான படங்களை அவர் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து கொண்டுள்ளார். அந்தப் படத்தில் காதலர் ஜார்ஜ் வெள்ளை மற்றும் சந்தன நிறம் கொண்ட உடையுடன் இருக்கிறார். எமி, கருப்பு, வெள்ளை உடையில் தேவதை போல் காட்சி தருகிறார்.  “மறக்க முடியாத எங்களின் நிச்சயதார்த்த நாள். எங்களின் அற்புதமான நண்பர்களுக்கும் குடும்பத்தினருக்கும் அனைவருக்கும் நன்றி” எனக் குறிப்பிடுள்ளார். பலருக்கு திருமணத்திற்குப் பிறகுதான் குழந்தை பரிசாக கிடைக்கும். எமிக்கு தன் காதல் பரிசாக முதலில் குழந்தை கிடைத்துவிட்டது. அதற்கு பிறகு கல்யாணம் நிச்சயமாகியுள்ளது. இதுதான் அவர் நாட்டுக் கலாச்சாரம். 

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close