ராமநாதபுரத்தில் கடந்த 23 ஆண்டுகளுக்குமுன் காணாமல் போன மீனவர் ஒருவர், தற்போது மனநலம் பாதிக்கப்பட்டு இலங்கையில் சுற்றித்திரிவது தெரியவந்துள்ளது.
கடந்த 1996-ம் ஆண்டு கடலுக்கு மீன்பிடிக்க சென்ற தங்கச்சிமடத்தைச் சேர்ந்த பரதன் என்ற மீனவர் மாயமானார். அவரின் நிலைமை என்னவானது என தெரியாததை அடுத்து, பரதன் காணாமல் போன அந்த நாளை, அவரது இறந்தநாளாக உறவினர்கள் அனுசரித்து வந்துள்ளனர். இந்நிலையில், இலங்கை யாழ்பாணத்தில் இருந்து வெளிவரக்கூடிய யூ ட்யூப் சேனல் ஒன்றில், கொழும்பு பகுதியில் மனநிலை பாதிக்கப்பட்டு, பிச்சை எடுப்பவர்களின் புகைப்படங்கள் ஒளிபரப்பாகியுள்ளன.
அந்த காணோலியில் ஆட்டோ ஓட்டுநர் ராஜேஷ் என்பவர், மாயமான பரதன் இருந்ததை பார்த்துள்ளார். இதனையடுத்து ராஜேஷ் பரதனின் உறவினர்களிடம் இதனை தெரிவிக்க, அவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும் புகைப்படத்தில் இருந்தது பரதன் தான் என்பதை உறுதி செய்த உறவினர்கள், அவரை மீட்டுத்தரக் கோரி ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Loading More post
"வாங்க மோடி... வணக்கங்க மோடி.." கொங்கு தமிழில் பாஜகவினரின் வரவேற்பு பாடல்
"நாட்டின் மிகப்பெரிய கலவரக்காரர் மோடி"-மம்தா பானர்ஜி ஆவேசம்
கேரளா, மகாராஷ்டிராவில் இருந்து வந்தால் 7 நாள் தனிமை - தமிழக அரசு
ராக்கெட் வேகத்தில் உயரும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை: ஒரே மாதத்தில் ரூ.100 உயர்வு!
சென்னை: 16 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது!
'ஒன்றிணைந்து செயல்படுவோம்...' - சசிகலாவின் அரசியல் வியூகம் தொடங்கிவிட்டதா?
ஆலிவ் ரிட்லி ஆமைகளைக் காக்கும் சென்னை... எப்படி, எத்தனை முட்டைகள்? - ஒரு பார்வை
ஒரு லிட்டர் பெட்ரோல் அடக்கவிலை ரூ.29.34 மட்டும்தான்... கிறுகிறுக்க வைக்கும் வரிப் பகிர்வு!
கொரோனாவுக்கு இடையே வேகமாக பரவும் டெங்கு காய்ச்சல்.. உஷார் டிப்ஸ்!