பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அமித்ஷாவின் சர்சைக்குரிய தேர்தல் பேச்சுக்களுக்கு 5 முறை தேர்தல் ஆணையர் அசோக் லவசா எதிர்ப்பு தெரிவித்துள்ளார். தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்ட தினத்தில் இருந்து தேர்தல் நடத்தை விதிகள் அமுலுக்கு வந்துள்ளன. இந்த நன்னடத்தை விதிகளை மீறும் அனைத்து அரசியல் கட்சி தலைவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையத்துக்கு முழு அதிகாரம் உண்டு. அவ்வகையில் மாயாவதி, உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்ளிடோருக்கு தேர்தல் பிரசாரம் செய்ய இடைக்கால தடைகள் விதிக்கப்பட்டன.
பிரதமர் மோடி பாலக்கோடு தாக்குதல், அபிநந்தன் குறித்து பேசியது, இஸ்லாமியர்கள் குறித்து பேசியது, மைனாரிட்டி என்று தாக்கி பேசியது ஆகியவை குறித்து புகார்கள் அளிக்கப்பட்டது. இது தொடர்பாக அளிக்கப்பட்ட 6 புகார்களிலும் மோடி மீது எந்த தவறும் இல்லை என்று தேர்தல் ஆணையம் தீர்ப்பு வழங்கி இருக்கிறது.
மொத்தம் மூன்று பேர் இந்த புகாரை விசாரித்தனர். தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா, தேர்தல் ஆணையர்கள் அசோக் லவசா மற்றும் சுஷில் சந்திரா ஆகியோர் விசாரணை நடத்தினார்கள். இதில் இரண்டு அதிகாரிகள் மோடி மீது தவறு இல்லை என்று முடிவெடுத்தார்கள். ஆனால் அசோக் லவசா மோடிக்கு எதிராக வாக்களித்துள்ளனர்.
இவர் 6 வழக்குகளில் 4 வழக்கில் மோடிக்கு எதிராக லவசா வாக்களித்தார். 6 வழக்குகளிலும் தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா மற்றும் தேர்தல் அதிகாரி சுஷில் சந்திரா மோடிக்கு ஆதரவாக வாக்களித்தனர். அதேபோல் அமித் ஷாவிற்கு எதிரான அனைத்து வழக்கிலும் அசோக் லவசா அவருக்கு எதிராக வாக்களித்தார்.அமித் ஷா மற்றும் மோடி இப்படி பேசியது மிக மிக தவறு என்று அசோக் லவசா கூறி இருக்கிறார். ஆனாலும் மெஜாரிட்டியாக இரண்டு அதிகாரிகள் மோடிக்கு ஆதரவாக நிலைப்பாடு எடுத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Courtesy: The Indian Express
Loading More post
'நல்ல நாள்', 'சமூக நீதி' - முதற்கட்ட வேட்பாளர் பட்டியல்... அதிமுக 'முந்தியது' ஏன்?
திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 6 தொகுதிகள் ஒதுக்கீடு!
கூட்டணிக் கட்சிகள் கேட்கும் இடங்களை எல்லாம் கொடுத்துவிட முடியாது -ஆர்.எஸ்.பாரதி
ஒதுங்கிய சசிகலா... தேர்தலில் எடுபடுமா தினகரன் வசமுள்ள 3 வியூகங்கள்?!
வாஷிங்டன் சுந்தர் அரை சதம் - 2ம் நாள் முடிவில் இந்திய அணி 294 ரன்கள் குவிப்பு
'நல்ல நாள்', 'சமூக நீதி' - முதற்கட்ட வேட்பாளர் பட்டியல்... அதிமுக 'முந்தியது' ஏன்?
கேரளாவில் கட்சி மாறும் நிர்வாகிகள்... சமூக நீதியை உறுதிப்படுத்த தவறியதா காங்கிரஸ்?!
ஒதுங்கிய சசிகலா... தேர்தலில் எடுபடுமா தினகரன் வசமுள்ள 3 வியூகங்கள்?!
அப்பாஸ் சித்திக்: மேற்கு வங்க அரசியலின் புது வரவு... யாருக்கு லாபம்?