மருத்துவமனை கேண்டீன் சூப்பில் கிடந்த ரத்தக்கறை படிந்த பஞ்சு: அதிர்ந்த நோயாளிகள்!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

மருத்துவமனை உணவகத்தில் கொடுக்கப்பட்ட வெஜ் சூப்பில் ரத்தக்கறை படிந்த பஞ்சு கிடந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Advertisement

புனேவில் உள்ள ஜெகாங்கிர் மருத்துவமனையில் மகேஷ் சத்புத் என்பவர் தனது கர்ப்பிணி மனைவியை சிகிச்சைக்காக சேர்த்துள்ளார். அன்றே மகேஷின் மனைவிக்கு பெண் குழந்தையும் பிறந்தது. ஆனாலும் தாயும், சேயும் மருத்துவமனையில் தொடர்ந்து ஓய்வுக்காக அனுமதிக்கப்பட்டிருதனர். மகேஷின் மனைவிக்கு வெஜ் சூப் கொடுக்குமாறு மருத்துவர்கள் பரிந்துரை செய்யவே, மருத்துவமனையின் உணவகத்தில் வெஜ் சூப் வாங்கி தன் மனைவிக்கு கொடுத்துள்ளார். 


Advertisement

வெஜ் சூப்பில் ஏதோ கிடப்பது போல் தோன்ற அதனை என்னவென்று பார்த்துள்ளார் மகேஷ். அது ரத்தக்கறை படிந்த காட்டன் பஞ்சு என்பது தெரியவர அதிர்ச்சி அடைந்த அவர் அதனை தனது செல்போனில் வீடியோவாக எடுத்துக்கொண்டார். பின்னர் இது குறித்து மருத்துவமனை நிர்வாகத்திடம் புகாரும் அளித்துள்ளார்.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள மருத்துவமனை நிர்வாகம், ''இது ஊழியர்களின் நாசவேலை. மருத்துவமனையில் ஊழியர்கள் பலர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள். மருத்துவமனையின் பெயருக்கு களங்கம் விளைவிக்கவே அவர்கள் இப்படிப்பட்ட நாசவேலையில் ஈடுபட்டிருக்கிறார்கள். இது குறித்து விசாரணை நடத்தப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும்'' என்று தெரிவித்துள்ளது. 


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement