டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மீதான தாக்குதல், பாஜகவின் விரக்தியை காட்டுகிறது என்று ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.
மக்களவை தேர்தலையொட்டி டெல்லியில் பரப்புரை மேற்கொண்டிருந்த ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவாலின் கன்னத்தில், சிவப்பு சட்டை அணிந்த நபர் ஒருவர் பாய்ந்து வந்து, பளார் என்று அறைந்தார். இதனால் அதிர்சசி அடைந்த அவர், சரிந்து விழுந்தார். இதையடுத்து, தாக்கியவரை பிடித்து இழுத்த தொண்டர்கள், அவரைச் சரமாரியாகத் தாக்கி, போலீசாரிடம் ஒப்படைத்தனர். அவர் பெயர் சுரேஷ் என்பது பின்னர் தெரியவந்தது.
இந்த தாக்குதல் பற்றி ஆம் ஆத்மி கட்சி, 'டெல்லி முதல்வர் மீது மற்றொரு தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது. கோழைத்தமாக நடத்தப்பட்ட இந்த தாக்குதல் எதிர்க்கட்சிகளின் தூண்டுதலின்பேரில் நடந்துள்ளது. இப்படி செய்து எங்கள் வெற்றியை தடுத்து விட முடியாது' என்று தெரிவித்துள்ளது. இந்த சம்பவத்துக்கு பலரும் கண்டனம் தெரித்து வருகின்றனர்.
இதுபற்றி ஆந்திர மாநில முதலமைச்சரும் தெலுங்கு தேசக் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடு கூறும்போது, ’’தோல்வியின் விரக்தி யில் இருக்கும் பாஜக, இதுபோன்ற தாக்குதல்களில் ஈடுபட்டுள்ளது. இதை வன்மையாக கண்டிக்கிறேன். ஜனநாயக முறைப்படி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு முதலமைச்சரை இப்படி கொடூரமாகத் தாக்குவதை ஏற்றுக்கொள்ள முடியாது. பாதுகாப்பு ஏற்பாடுகளைச் சரியாக செய்யாத டெல்லி போலீஸ் இதற்கு பொறுப்பேற்க வேண்டும். இத்தகைய தாக்குதல்கள் ஜனநாயகத்தை பலப்படுத்துவதற்கான நமது உறுதியை, வலுப்படுத்தும்’’ என்று தெரிவித்துள்ளார்
Loading More post
'நல்ல நாள்', 'சமூக நீதி' - முதற்கட்ட வேட்பாளர் பட்டியல்... அதிமுக 'முந்தியது' ஏன்?
திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 6 தொகுதிகள் ஒதுக்கீடு!
கூட்டணிக் கட்சிகள் கேட்கும் இடங்களை எல்லாம் கொடுத்துவிட முடியாது -ஆர்.எஸ்.பாரதி
ஒதுங்கிய சசிகலா... தேர்தலில் எடுபடுமா தினகரன் வசமுள்ள 3 வியூகங்கள்?!
வாஷிங்டன் சுந்தர் அரை சதம் - 2ம் நாள் முடிவில் இந்திய அணி 294 ரன்கள் குவிப்பு
'நல்ல நாள்', 'சமூக நீதி' - முதற்கட்ட வேட்பாளர் பட்டியல்... அதிமுக 'முந்தியது' ஏன்?
கேரளாவில் கட்சி மாறும் நிர்வாகிகள்... சமூக நீதியை உறுதிப்படுத்த தவறியதா காங்கிரஸ்?!
ஒதுங்கிய சசிகலா... தேர்தலில் எடுபடுமா தினகரன் வசமுள்ள 3 வியூகங்கள்?!
அப்பாஸ் சித்திக்: மேற்கு வங்க அரசியலின் புது வரவு... யாருக்கு லாபம்?