’’இந்துக்கள் வன்முறையில் ஈடுபடமாட்டார்கள் என்பது தவறான வாதம்’’ என்று கூறிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொது செயலாளர் சீதாராம் யெச்சூரி மீது ஹரித்துவார் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
மத்தியப்பிரதேச மாநிலம் போபாலில் காங்கிரஸ் வேட்பாளர் திக்விஜய சிங்கை ஆதரித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், இந்துக்களும் பயங்கரவாத செயல்களில் ஈடுபடுவார்கள் என்பதைத்தான் மகாபாரதமும், ராமாயணமும் வெளிப்படுத்துகின்றன, இந்துக்கள் வன்முறையில் ஈடுபடமாட்டார்கள் என்பது தவறான வாதம் என்று குறிப்பிட்டார். சீதாராம் யெச்சூரியின் இந்தக் கருத்துக்கு சிவசேனா, பாஜக ஆகிய கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன.
இந்நிலையில் யோகா குரு பாபா ராமதேவ் மற்றும் சில மடாதிபதிகள் யெச்சூரி மீது ஹரித்துவார் போலீசில் புகார் செய்தனர். ‘’நம் முன்னோர் களை யெச்சூரி அவமானப்படுத்தியுள்ளார். இது பெருங்குற்றம். இதற்கு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று அவர் பின்னர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். இதையடுத்து ஹரித்வார் போலீசார் அவர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
Loading More post
‘உதயசூரியன் சின்னத்தில்தான் போட்டி’ திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 6 தொகுதிகள் ஒதுக்கீடு!
டாப் 5 தேர்தல் செய்திகள் : பாஜக வேட்பாளர் உத்தேச பட்டியல்..பாமகவுக்கு மாம்பழ சின்னம்!
கொளத்தூர் இல்லை.. திருவொற்றியூர் தொகுதியில் சீமான் களமிறங்க வாய்ப்பு
முதலிடத்தில் இந்தியா - டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் நியூசிலாந்துடன் மோதல்!
பாமகவுக்கு மாம்பழம் சின்னம் ஒதுக்கீடு : தேர்தல் ஆணையம்
ஓவைசி Vs அப்பாஸ் சித்திக்... மேற்கு வங்கத்தில் பாஜகவுக்கு சாதகமா? - ஒரு பார்வை
ராகுல் காந்திக்கு பலப்பரீட்சை: காங்கிரஸின் 'ஜி-23' தலைவர்களால் சிக்கல் ஏன்?
“அவன் அடிச்சதே ஆண்டர்சன் பால்ல தான்யா..” பொளந்து கட்டிய ‘மான்ஸ்டர்’ ரிஷப் பண்ட்!
'நல்ல நாள்', 'சமூக நீதி' - முதற்கட்ட வேட்பாளர் பட்டியல்... அதிமுக 'முந்தியது' ஏன்?