ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
டெல்லி கேபிடல்ஸ் மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கு இடையிலான லீக் போட்டி டெல்லி பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் முதலில் பேட்டிங் செய்தது. இஷாந்த் சர்மாவின் அசத்தலான பந்துவீச்சில் ரகானே, லிவிங்ஸ்டன் லோம்ரார் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். அதேபோல், மிஸ்ரா தன்னுடைய பங்கிற்கு கோபால், பின்னி, கௌதம் விக்கெட்களை சாய்த்தார். ராஜஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 115 ரன்கள் மட்டுமே எடுத்தது. ரியால் பராக் மட்டும் அரைசதம் அடித்தார்.
116 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய டெல்லி அணியில், தவான் 16, பிரித்வி ஷா 8 ரன்னில் அடுத்தடுத்து சோதி பந்துவீச்சில் ஆட்டமிழந்தனர். டெல்லி அணி 28 ரன்னில் இரண்டு விக்கெட்களை இழந்தது. சிறிது நேரம் நிதானமாக விளையாடிய கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் 15 ரன்னில் ஆட்டமிழந்தார். பின்னர் வந்த இங்கிராமும் 12 ரன்னில் நடையைக் கட்டினார். 13.4 ஓவரில் டெல்லி அணி 83 ரன்களுக்கு 4 விக்கெட்டை இழந்தது. ஒருபுறம் விக்கெட் வீழ்ந்தாலும் ரிஷப் பண்ட் மட்டும் நிலைத்து நின்று ஆடினார். ரூதர் போஃட் 11 ரன்னில் அவுட் ஆனார்.
இறுதியில், 16.1 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 121 ரன்கள் எடுத்து டெல்லி கேபிடல்ஸ் வெற்றி பெற்றது. 23 பந்துகள் மீதமுள்ள நிலையில் டெல்லி அணி வெற்றியை எட்டியுள்ளது. ரிஷப் பண்ட் சிறப்பாக விளையாடி 38 பந்துகளில் 53 ரன்கள் எடுத்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். அவர் 5 சிக்ஸர் விளாசினார். ராஜஸ்தான் அணியில் சோதி மூன்று விக்கெட் வீழ்த்தினார். கோபால் இரண்டு விக்கெட் சாய்த்தார்.
இந்த வெற்றியின் மூலம் டெல்லி அணி 18 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது. அவர்கள் தற்போது 0.044 புள்ளிகள் பெற்றுள்ளனர். மும்பை அணி வெற்றி பெறும் பட்சத்தில் டெல்லி மூன்றாவது இடத்திற்கு செல்லும் வாய்ப்புள்ளது.
Loading More post
"அதிகாரம், பண பலத்திற்கு முன்னால் யாராலும் தாக்கு பிடிக்க முடியாது" - ராகுல் காந்தி
தமிழக தேர்தல்: முடிவானது அதிமுக - பாமக தொகுதி பங்கீடு!
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?
சட்டப்பேரவையில் எடப்பாடி பழனிசாமி, ஸ்டாலினுக்கு சபாநாயகர் பாராட்டு
வன்னியர் இடஒதுக்கீட்டை திமுகவே செயல்படுத்தும்: மு.க.ஸ்டாலின்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?
கவுன்டவுனை தொடங்கிய கமல்: மூன்றாம் அணி இலக்கை நெருங்குகிறதா மக்கள் நீதி மய்யம்?
குழந்தைகளுக்கு தேவையான 'வைட்டமின் டி' உடலில் சேருவதை உறுதிசெய்வது எப்படி? - ஒரு வழிகாட்டி
இந்திய அணிதான் 'டார்கெட்'... மைக்கேல் வாகன் கக்குவது கருத்துகளா, அபத்தங்களா? - ஒரு பார்வை