த்ரிஷாவின் பிறந்த நாளை முன்னிட்டு அவர் நடிப்பில் உருவாகியுள்ள ‘பரமபதம் விளையாட்டு’ டிரெய்லர் இன்று வெளியிடப்பட்டது.
தமிழ் சினிமாவில் 20 ஆண்டுகளுக்கு முன்னதாக நடிக்க துவங்கிய த்ரிஷா இன்றும் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வருகிறார். அவருக்கென்று ஒரு தனி ரசிகர் பட்டாளத்தையே பிடித்து வைத்துள்ளார். இந்நிலையில் இன்று அவர் தனது 36 வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு திரை பிரபலங்களும் ரசிகர்களும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
பிறந்த நாளை முன்னிட்டு அவர் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில், “மே 4-ம் தேதி என்றாலே எனக்கு ஸ்பெஷலான நாள். என்னுடைய பிறந்தநாள் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் இந்த வருஷம் ரொம்ப ஸ்பெஷல்ன்னு சொல்லலாம். என்னுடைய 60-வது படமான "பரமபதம் விளையாட்டு" படத்தோட ட்ரெய்லர் மற்றும் செகண்ட் லுக் ரிலீஸ் பண்றோம்.
இது ஒரு பொலிடிக்கல் திரில்லர் படம். இந்த ஜானரில் என்னோட முதல் படம். ஒரு இரவில், காட்டுக்குள் நடக்குறது தான் முழு படமும். கண்டிப்பா இந்தப் படம் எல்லா தரப்பிலுள்ள ரசிகர்களுக்குமான படமா இருக்கும். ‘பரமபதம் விடையாட்டு’ அனைத்தும் கலந்த த்ரில்லர்,
ஆக்ஷன் படம். அம்மா பொண்ணுக்கும் இடையேயான உணர்வுப்பூர்வமான காட்சிகள் படத்தில் இருக்கு. படத்தின் ட்ரெய்லர் குறித்த உங்களது கருத்துகளை சமூகவலைத்தளங்களில் தெரியப்படுத்துங்கள்” என்று கூறியுள்ளார்.
Happy To Tell You All That Jaanu's ( @trishtrashers ) 60th Venture #ParamapathamVilayattuTrailer Is Released today. On Her Birthday! Super Exited To Share This Trailer.https://t.co/4pDX9QDlxA
All The Best Dir Thirugnanam & team@AmrishRocks1 @24HRSProductio3— VijaySethupathi (@VijaySethuOffl) May 4, 2019
அதன்படி த்ரிஷாவின் 60-வது படமான ‘பரமபதம் விளையாட்டு’ படத்தின் ட்ரெய்லரை நடிகர் விஜய்சேதுபதி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார். இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் திருஞானம் இயக்கியுள்ளார். ரிச்சர்டு மற்றும் நந்தா முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். படத்துக்கு அம்ரிஷ் இசையமைத்துள்ளார்.
Loading More post
இந்தியா: 24 மணி நேரத்தில் 2.61 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று!
பிரதமர் மோடி மேற்குவங்க தேர்தலில் பிஸியாக இருக்கிறார் - மகாராஷ்டிரா முதல்வர் குற்றச்சாட்டு
கட்டுக்குள் அடங்காத கொரோனா - கடந்த 10 நாட்களில் தமிழக கொரோனா பாதிப்பு நிலவரம் என்ன?
கொரோனாவால் மிகப்பெரிய அளவில் அசம்பாவிதம் நடந்தால் தேர்தல் ஆணையமே பொறுப்பு - மம்தா பானர்ஜி
"கடந்த ஆண்டைபோல கொரோனாவை ஒழிப்போம்" - பிரதமர் மோடி
தமிழ் சினிமாவில் நகைச்சுவை ஆயுதமேந்திய சமுதாய சிற்பி நடிகர் விவேக்!
"எங்கள் ஹீரோ விவேக்!"- வடிவேலு முதல் சார்லி வரை... நகைச்சுவை திரைக் கலைஞர்கள் புகழஞ்சலி
'சீர்திருத்தக் கருத்துகளைச் சொன்ன சின்னக் கலைவாணர்...' - தமிழக எம்.பி.க்கள் புகழஞ்சலி
"விவேக்... உண்மையான ஹீரோ!" - ரஜினி முதல் சூரி வரை... திரைக் கலைஞர்களின் புகழஞ்சலி