ஆற்றுக்குள் பாய்ந்தது விமானம்: 136 பயணிகள் உயிர் தப்பினர்

ஆற்றுக்குள் பாய்ந்தது விமானம்: 136 பயணிகள் உயிர் தப்பினர்
ஆற்றுக்குள் பாய்ந்தது விமானம்: 136 பயணிகள் உயிர் தப்பினர்

அமெரிக்காவில் ஆற்றுக்குள் விமானம் பாய்ந்ததில் 136 பயணிகள் காயம் ஏதுமின்றி அதிர்ஷ்டவசமாக தப்பினர்.

கியூபாவின் குவாண்டனமோ கடற்படை தளத்தில் இருந்து புளோரிடாவில் உள்ள ஜாக்சன்விலே கடற்படை விமான நிலையத்துக்கு போயிங் 737 ரக விமானம் ஒன்று வந்தது. அதில் 136 பயணிகள் இருந்தனர். விமான நிலையத்தில் தரையிறங்கும்போது ரன்வே-யை தாண்டி வேகமாகச் சென்ற விமானம் அருகில் இருந்த செயின்ட் ஜான் ஆற்றுக்குள் திடீரென்று பாய்ந்தது.

இதனால் விமானத்துக்குள் இருந்தவர்கள் அலறினர். ஆனால் ஆற்றில் முங்காமல் விமானம் மிதந்ததால் பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். ‘விமானத்தில் வந்த அனைவரும் நலமுடன் இருக்கிறார்கள். யாருக்கும் காயமில்லை’’ என்று ஜாக்சன்விலே மேயர் தெரிவித்துள்ளார். அங்கு மீட்பு பணிகள் நடந்து வருகின்றன.

இந்தச் சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com