சீதாராம் யெச்சூரியின் சர்ச்சை பேச்சு : கண்டனம் தெரிவிக்கும் பாஜக

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

கேரளாவில் அரசியலுக்காக பாஜக, ஆர்.எஸ்.எஸ் தொண்டர்களை கொலை செய்யும் கம்யூனிஸ்டுகள் கொலைகாரர்கள் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். 


Advertisement

மத்தியப்பிரதேச மாநிலம் போபாலில் காங்கிரஸ் வேட்பாளர் திக்விஜய சிங்கை ஆதரித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், இந்துக்களும் பயங்கரவாத செயல்களில் ஈடுபடுவார்கள் என்பதைத்தான் மகாபாரதமும், ராமாயணமும் வெளிப்படுத்துகின்றன என்று குறிப்பிட்டார். சீதாராம் யெச்சூரியின் இந்தக் கருத்துக்கு சிவசேனா, பாஜக ஆகிய கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.


Advertisement

இதுகுறித்து தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தனது ட்விட்டர் பக்கத்தில், “ ஓட்டு வங்கி அரசியலுக்காக சீதாராம்யெச்சூரி... கம்யூனிஸ்ட்டுகளின் குருட்டுப்பார்வையில்.... வரும் இதுபோன்ற வன்மம், குரோதம் நிறைந்த விமர்சனத்தைக்கண்டிக்கிறோம். கேரளாவில் பாஜக/ஆர்எஸ்எஸ் தொண்டர்களை அரசியலுக்காக கொலை செய்யும் கம்யூனிஸ்ட் கொலைகாரர்கள்” எனத் தெரிவித்துள்ளார். 

இதேபோல் பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா தனது ட்விட்டர் பக்கத்தில், “ஸ்டாலின், லெனின், மாவோ உள்ளிட்ட கம்யூனிஸ்ட்க்கள் பல கோடி மக்களை உலகு முழுவதும்  கொலை செய்த கொலைகார கூட்டம் என்பதை மறந்து  இந்துக்களின் மத உணர்வை புண்படுத்திய கொலைகார கம்யூனிஸ்ட் யச்சூரியின் இந்த இழிசெயலை வன்மையாகக் கண்டிக்கிறேன்.” எனத் தெரிவித்துள்ளார்.


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement