இலங்கை குண்டு வெடிப்புகளுக்கு பிரதான குற்றவாளியாக கருதப்படும் சஹரானின் சகோதரி கைது செய்யப்பட்டுள்ளார்.
இலங்கையில் ஈஸ்டர் ஞாயிறு நாளில் நடந்த தொடர் குண்டுவெடிப்புகளைத் தொடர்ந்து குற்றவாளிகளை பிடிக்க நாடு முழுவதும் தேடுதல் வேட்டை நடந்துவருகிறது. இந்நிலையில், தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் கொழும்பு மாவட்ட அமைப்பாளர் முகமது பவாஸ் வரும் 7ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளார். இந்தச்சூழலில் மட்டக்களப்பு காத்தான்குடியைச் சேர்ந்த பிரதான குற்றவாளியான சஹரானின் சகோதரி, மட்டக்களப்பு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவரிடம் இருந்து 20 லட்சம் ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அவரிடம் விசாரணை நடந்துவரும் நிலையில், சஹரானின் சகோதரர் வீட்டிலிருந்து தற்கொலைப்படையினரின் ஆடைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. சாய்ந்தமருதில் தற்கொலைப் படைத்தாக்குதல் நடத்தி உயிரிழந்த சஹரான் ஹாசீமின் சகோதரர் ரில்வானின் காத்தான்குடி வீட்டில் தற்கொலைப்படையினர் பயன்படுத்தும் 4 அங்கிகள் மீட்கப்பட்டுள்ளன. இதையடுத்து வீட்டிலிருந்த ரில்வானின் உறவினர்கள் இருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
Loading More post
"ஈம சடங்கு நிகழ்ச்சிக்காவது அனுமதி கொடுங்க” - தெருக்கூத்துக் கலைஞர்கள் கோரிக்கை
கும்பமேளா: கங்கையில் புனித நீராடல்... கொரோனா 'கவலை' அதிகரிப்பது ஏன்?
ப்ளஸ் 2 மொழிப்பாடத் தேர்வு மே 31ம் தேதிக்கு மாற்றம் - தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு
தமிழகத்தில் 7000- ஐ நெருங்கியது தினசரி கொரோனா பாதிப்பு!
2-ம் அலை தீவிரம்: சீரம், பாரத் பயோடெக் நிறுவன கொரோனா தடுப்பூசி உற்பத்தி நிலவரம் என்ன?