லக்னோ மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் சமாஜ்வாதி வேட்பாளர் பூனம் சின்ஹாவை ஆதரித்து அவர் மகளும் நடிகையுமான சோனாக்ஷி சின்ஹா இன்று பரப்புரையில் ஈடுகிறார்.
தமிழில் ரஜினி ஜோடியாக ’லிங்கா’ படத்தில் நடித்தவர் இந்தி நடிகை, சோனாக்ஷி சின்ஹா. இந்தி நடிகரும் அரசியல்வாதியுமான சத்ருகன் சின்ஹாவின் மகளான இவர், இப்போது ’தபாங் 3’ படத்தில் சல்மான் கானுடன் நடித்து வருகிறார்.
இவர் தந்தை சத்ருகன் சின்ஹா, பாஜகவில் இருந்து விலகி சமீபத்தில் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். பீகார் மாநிலம் பாட்னா சாகிப் மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில், போட்டியிடுகிறார். இவர் மனைவி, பூனம் சின்ஹா. நடிகையான இவர், கடந்த மாதம் 16 ஆம் தேதி சமாஜ்வாதி கட்சியில் இணைந்தார். இவர் லக்னோ மக்களவைத் தொகுதியில், மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை எதிர்த்து போட்டியிடுகிறார். இந்த தொகுதிக்கு 6 ஆம் தேதி வாக்குப்பதிவு நடக்கிறது.
இந்நிலையில், தனது அம்மாவுக்கு ஆதரவாக, நடிகை சோனாக்ஷி சின்ஹா, தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுகிறார். இன்று லக்னோவில் இருந்து நடைபெறும் பிரசாரப் பேரணியில் பங்கேற்று வாக்கு சேகரிக்கிறார்.
Loading More post
‘உதயசூரியன் சின்னத்தில்தான் போட்டி’ திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 6 தொகுதிகள் ஒதுக்கீடு!
டாப் 5 தேர்தல் செய்திகள் : பாஜக வேட்பாளர் உத்தேச பட்டியல்..பாமகவுக்கு மாம்பழ சின்னம்!
கொளத்தூர் இல்லை.. திருவொற்றியூர் தொகுதியில் சீமான் களமிறங்க வாய்ப்பு
முதலிடத்தில் இந்தியா - டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் நியூசிலாந்துடன் மோதல்!
பாமகவுக்கு மாம்பழம் சின்னம் ஒதுக்கீடு : தேர்தல் ஆணையம்
“6 தொகுதிக்கு கட்டாயப்படுத்தவில்லை; வேண்டுகோள் வைத்தார்கள்” திருமாவளவன் சிறப்பு பேட்டி
ஓவைசி Vs அப்பாஸ் சித்திக்... மேற்கு வங்கத்தில் பாஜகவுக்கு சாதகமா? - ஒரு பார்வை
ராகுல் காந்திக்கு பலப்பரீட்சை: காங்கிரஸின் 'ஜி-23' தலைவர்களால் சிக்கல் ஏன்?
“அவன் அடிச்சதே ஆண்டர்சன் பால்ல தான்யா..” பொளந்து கட்டிய ‘மான்ஸ்டர்’ ரிஷப் பண்ட்!