திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, சூலூர், ஓட்டப்பிடாரம் ஆகிய 4 சட்டமன்றத் இடைத்தேர்தலில் போட்டியிடும் இறுதி வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டன.
அரவக்குறிச்சி சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட 77 பேர் 91 வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர். இதில் 68 பேரின் வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டு 23 வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டன. தொடர்ந்து வேட்புமனு பரிசீலனையின்போது 5 பேர் வாபஸ் பெறப்பட்டதையடுத்து அரவக்குறிச்சியில் போட்டியிட 63 பேர் கொண்ட இறுதிவேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது.
சூலூர் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட 61 பேர் வேட்புமனுத் தாக்கல் செய்திருந்தனர். இதில் 39 பேரின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டு 22 பேரின் வேட்புமனு ஏற்கப்பட்டது. பின்னர், யாரும் வேட்புமனுவை வாபஸ் பெறாததால் சூலூர் இடைத்தேர்தலில் 22 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
திருப்பரங்குன்றம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட 63 பேர் வேட்புமனுத் தாக்கல் செய்திருந்த நிலையில் 19 பேரின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டு 44 பேரின் வேட்புமனு ஏற்கப்பட்டது. இதில் வேட்புமனு பரிசீலனையின்போது 7 பேர் தங்கள் வேட்புமனுவை வாபஸ் பெற்றனர். இதனையடுத்து திருப்பரங்குன்றம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் 37 வேட்பாளர்கள் இறுதியாக களத்தில் உள்ளனர்.
ஓட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட 41 பேட் வேட்புமனுத் தாக்கல் செய்திருந்தனர். இதில் 23 பேரின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டு 18 பேரின் வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டன. பின்னர் வேட்புமனு பரிசீலனையின்போது 3 சுயேச்சைகள் வாபஸ் பெற்றதால், இறுதியாக 15 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். 4 தொகுதி இடைத்தேர்தலிலும் ஓட்டப்பிடாரம் தொகுதியிலேயே குறைவான எண்ணிக்கையில் வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
Loading More post
திருச்சி: மழைநீரில் மூழ்கி 50,000 ஏக்கர் நெற்பயிர் நாசம்; இழப்பீடு வழங்க கோரிக்கை
’’நான் நிச்சயம் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வேன்’’ - முதல்வர் பழனிசாமி
கொரோனா தடுப்பூசிக்கான ஒப்புதல் - ஏற்புப் படிவத்தில் கோவாக்சின் குறித்து இருப்பது என்ன?
தமிழகத்தில் முதல் தடுப்பூசியை செலுத்திக்கொண்டார் மதுரை மருத்துவர்!
"இரண்டும் பாதுகாப்பானவை; வதந்திகளை நம்பாதீர்! - கொரோனா தடுப்பூசி பணியை தொடங்கிவைத்த மோடி
பரிசோதனை முழுமைபெறாத கோவாக்சின் தடுப்பூசியை இந்திய அரசு வாங்குவது ஏன்? எழும்பும் கேள்விகள்
ஈஸ்வரன்... போதுமான பொழுதுபோக்கு அனுபவம் தந்ததா? - திரைப்பார்வை
சப்ஜெக்டில் மட்டும் சமூக அக்கறை போதுமா? - 'பூமி' என்னும் சினிமா எழுப்பும் கேள்விகள்!
"நாங்கள் அன்று அழுதோம், சிரித்தோம்..." - அஸ்வின் மனைவியின் உணர்வுபூர்வ பகிர்வு