“டான்செட் நுழைவுத் தேர்வை அண்ணா பல்கலையே நடத்தும்”- துணைவேந்தர்

Anna-university-conducts-TANCET-entrance-exam-this-year

முதுநிலை பொறியியல் படிப்புகளுக்கான டான்செட் நுழைவுத் தேர்வை அண்ணா பல்கலைக்கழகமே நடத்தும் என துணைவேந்தர் சூரப்பா‌ தெரிவித்துள்ளார்.


Advertisement

முன்னதாக, அண்ணா பல்கலைக்கழக வளாகங்களுக்கு மட்டும் ஏயூசிஇடி (AUCET) என்ற தனி நுழைவுத் தேர்வு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால், மற்ற கல்லூரிகளில் சேர டான்செட், அண்ணா பல்கலைக்கழகத்தில் சேர ஏயூசிஇடி என இரு நுழைவுத் தேர்வுகளை எழுத வேண்டுமா? என்ற குழப்பம் மாணவர்களிடையே ஏற்பட்டது.


Advertisement

இதற்கிடையே, ஏயூசிஇடி தேர்வை ரத்து செய்துவிட்டு ஒரே நுழைவுத் தேர்வை நடத்த வேண்டும் என அண்ணா பல்கலை‌‌க்கழகத்திற்கு உயர்கல்வித் துறை பரி‌ந்துரைத்தது. அதைத்தொ‌டர்ந்து டான்செட் தேர்வை அண்ணா பல்கலைக்கழகம் நடத்துவது குறித்த ஆலோசனைக் கூட்டம் அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது. இதில் ஏயூசிஇடி என தனியாக நுழைவுத்தேர்வு நடத்தப்படாது என்றும் டான்செட் நுழைவுத் தேர்வை அண்ணா பல்கலைக்கழகமே நடத்தும் எனவும் ‌முடிவெடுக்கப்பட்டுள்ளது.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement