கடந்த இரண்டு போட்டிகளில் ராஜஸ்தான் அணி வென்றதில் தனது பங்களிப்பு இருப்பதை நினைத்து மகிழ்ச்சியடைவதாக அந்த அணியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் தொடரின் 49வது லீக் போட்டி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் இடையே இன்று நடைபெறுகிறது. பெங்களூர் அணி இதுவரை விளையாடியுள்ள 12 போட்டிகளில் 4 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. இதனால் அது ப்ளே ஆஃப் சுற்றில் பங்கேற்கும் வாய்ப்பை முற்றிலும் இழந்துவிட்டது.
ஆனால் ராஜஸ்தான் அணி அடுத்த இரண்டு போட்டிகளிலும் அதிக ரன் ரேட்டில் வெற்றி பெற்று, அதேசமயம் ஹைதராபாத் மற்றும் கொல்கத்தா அணிகள் தோல்வியடைந்தால் ப்ளே ஆஃபில் இடம்பெறும் வாய்ப்புள்ளது. முன்னதாக தொடர் தோல்வியை சந்தித்து வந்த ராஜஸ்தான் அணி, ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித்தை கேட்பனாக போட்ட பின்னால் 3ல் இரண்டு போட்டிகளை வென்றுள்ளது.
இதுதொடர்பாக பேசியுள்ள ஸ்மித், “நான் குறைவான நேரம் இருக்கும்போது பொறுப்பை கையில் எடுத்துள்ளேன் என்று நினைக்கிறேன். ஆரம்பத்தில் நான் தனிப்பட்ட வகையிலும் அணியில் கூட்டாக செயல்படாதது போல் இருந்தது. அணியும் கூட்டாக செயல்பட்டதாக தெரியவில்லை.
ஆனால் இப்போது நான் சற்று சிறப்பாக தொடர் சென்று கொண்டிருப்பதை உணர்கிறேன். கடந்த இரண்டு போட்டிகளை வென்றதும், அதில் என் பங்களிப்பு இருந்ததும் மகிழ்ச்சி அளிக்கிறது. தற்போது அணி சரியாக சென்றுகொண்டிருக்கிறது, இது சிறப்பானது” என்று தெரிவித்துள்ளார்.
Loading More post
“வன்னியர்களுக்கான இடஒதுக்கீடுதான் பாமக குறைவான தொகுதிகளை பெறக்காரணம்” - அன்புமணி பேட்டி
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்!
அரசு பஸ் ஊழியர்களின் வேலைநிறுத்தம் வாபஸ்
"அதிகாரம், பண பலத்திற்கு முன்னால் யாராலும் தாக்கு பிடிக்க முடியாது" - ராகுல் காந்தி
தமிழக தேர்தல்: முடிவானது அதிமுக - பாமக தொகுதி பங்கீடு!
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?
கவுன்டவுனை தொடங்கிய கமல்: மூன்றாம் அணி இலக்கை நெருங்குகிறதா மக்கள் நீதி மய்யம்?
குழந்தைகளுக்கு தேவையான 'வைட்டமின் டி' உடலில் சேருவதை உறுதிசெய்வது எப்படி? - ஒரு வழிகாட்டி