“ஜனநாயகப் படுகொலையை தட்டி கேட்க ஆட்சியைக் கவிழ்ப்போம்” - திமுக

DMK-will-Defensively-dispose-this-government---RS-Bharathi

ஆட்சியைக் கவிழ்ப்போம் என நம்பிக்கையுள்ளதால்தான் நம்பிக்கை இல்லா தீர்மானத்தை கொடுத்துள்ளதாக திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார்.


Advertisement

சென்னையிலுள்ள தலைமைச் செயலகத்தில் சட்டமன்ற செயலர் மற்றும் சபாநாயகரிடம் திமுக சார்பில் சபாநாயகர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் அளிக்கப்பட்டது. அதனை அளித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஆர்.எஸ். பாரதி, “இந்திய அரசியல் சட்டத்தினுடைய 179வது ‘அ’ பிரிவின் படி, சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானத்தை முன்மொழிந்து தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் கொடுத்த தீர்மானத்தை சட்டப்பேரவை செயலாளரிடம் தந்துள்ளோம். அதேபோன்று ஒரு நகலை சபாநாயகருக்கும் தர வேண்டும் என சட்டத்தில் இருப்பதால், அவருக்கும் ஒரு நகலை கொடுத்துள்ளோம். ஏற்கனவே கடந்த 2017ஆம் ஆண்டு அதிமுக கொறடா கொடுத்த புகாரை ஏற்று ஒரே மாதத்தில் 18 எம்.எல்.ஏக்களை சபாநாயகர் தகுதி நீக்கம் செய்தார். 


Advertisement

அது குறித்து பல விமர்சனங்களும், பல்வேறு விவாதங்களும் நடைபெற்று வந்திருக்கின்றன. அதேநேரத்தில் ஆட்சிக்கு எதிராக வாக்களித்த ஓ.பி.எஸ் உள்ளிட 11 சட்டமன்ற உறுப்பினர்கள் பதவிநீக்கம் செய்யப்படாமல், அவர்களுக்கு பரிசு அளிப்பதுபோல் துணை முதலமைச்சர் பதவி கொடுக்கப்பட்டிருக்கிறது. அதுதொடர்பான வழக்கு தீர்ப்பிற்காக உச்சநீதிமன்றத்தில் காத்துக் கொண்டிருக்கிறது. ஏற்கனவே சபாநாயகர் இப்படி தவறான நடவடிக்கை எடுத்துள்ளார். அதையெல்லாம் பொருட்படுத்தாமல் தற்போது மேலும் 3 பேரை தகுதி நீக்கம் செய்ய முடிவெடுத்துள்ளார். 

எனவே இந்த ஜனநாயகப் படுகொலையை தட்டி கேட்கும் வகையில் மு.க.ஸ்டாலின் சபாநாயகர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானத்தை கொடுத்துள்ளார். ஆட்சியை கவிழ்க்க முடியும் என்ற நம்பிக்கை இருப்பதால் தான், நம்பிக்கையில்லா தீர்மானம் கொடுத்துள்ளோம்” என்றார். 

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement