ராகுல் காந்தியின் மீதான குடியுரிமை புகார் குப்பைத்தனமானது என காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.
இந்தியா மட்டுமின்றி பிரிட்டன் குடியுரிமை பெற்று ஒரு நிறுவனத்தின் இயக்குநராக ராகுல்காந்தி ஆதாயம் தரும் பதவி வகித்து வருவதாக பாரதிய ஜனதா மாநிலங்களவை எம்.பி. சுப்பிரமணியன் சுவாமி புகார் தெரிவித்திருந்தார். இதைத்தொடர்ந்து புகார் குறித்து 15 நாட்களுக்குள் விளக்கம் அளிக்கும்படி ராகுல் காந்திக்கு உள்துறை அமைச்சகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
அதில், பிரிட்டனின் வின்செஸ்டர் நகரில் உள்ள ஒரு நிறுவனத்தின் இயக்குநராகவும், செயலாளராகவும் ராகுல் காந்தி பணியாற்றி வருவது தெரியவந்துள்ளது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், அந்த நிறுவனம் செலுத்திய 2005 மற்றும் 2006-ஆம் ஆண்டுக்கான வருமான வரிக் தாக்கலில் ராகுலின் பிறந்த தேதி சரியாக குறிப்பிடப்பட்டு, பிரிட்டனைச் சேர்ந்தவர் எனச் சுட்டிக் காட்டப்பட்டிருப்பதாகவும் உள்துறை அமைச்சகத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, உண்மை நிலை என்னவென்பதை ராகுல் காந்தி விளக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், ராகுல் காந்தியின் மீதான குடியுரிமை புகார் குப்பைத்தனமானது என காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.
“ராகுல்காந்தி ஒரு இந்தியர் என்பது இந்தியா முழுமைக்கும் தெரிந்ததே. அவர் பிறந்தது, வளர்ந்தது. படித்தது எல்லாம் இந்தியாவில்தான். மக்களை திசை திருப்ப நடக்கும் முயற்சிதான் இது. நாட்டில் வேலையின்மை தலைவிரித்தாடுகிறது. அதற்கு மோடி தரப்பில் எந்தப் பதிலும் இல்லை. விவசாயிகள் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர். ராகுல் மீதான இந்தப் புகார் குப்பைத்தனமானது. நாடகத்தனமானது.” என பிரியங்கா காந்தி தெரிவித்தார்.
Loading More post
தோல்வியில் முடிந்த விவசாயிகளுடனான மத்திய அரசின் 9ஆம் கட்ட பேச்சுவார்த்தை
“நானே கொரோனா தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள தயாராக உள்ளேன்” - அமைச்சர் விஜயபாஸ்கர்
2ஜி வழக்கு: மேல்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணை பிப். 23ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு
“வழக்கறிஞர் முதல் தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் வரை” - மறைந்த ஞானதேசிகனின் அரசியல் பயணம்
அயோத்தியில் ராமர் கோயில் கட்ட ரூ.5 லட்சம் நன்கொடை அளித்த குடியரசுத் தலைவர்
ஈஸ்வரன்... போதுமான பொழுதுபோக்கு அனுபவம் தந்ததா? - திரைப்பார்வை
திமிறும் காளைகளை திமில் தழுவி அடக்கும் காளையர் - அவனியாபுரம் ஜல்லிக்கட்டு வீடியோ தொகுப்பு
'ஜல்லிக்கட்டு' ஆன 'சல்லிக்கட்டு'... தொன்மையும் வரலாறும் - ஒரு பார்வை
அனல் பறக்கும் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு... சீறும் காளைகள், அடக்க பாயும் வீரர்கள்! - ஆல்பம்