இரட்டை குடியுரிமை புகார் தொடர்பாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு உள்துறை அமைச்சகம் நோட்டீஸ் அனுப்பி விளக்கம் கேட்டுள்ளது.
இந்தியா மட்டுமின்றி பிரிட்டன் குடியுரிமை பெற்று ஒரு நிறுவனத்தின் இயக்குநராக ராகுல்காந்தி ஆதாயம் தரும் பதவி வகித்து வருவதாக பாரதிய ஜனதா மாநிலங்களவை எம்.பி. சுப்பிரமணியன் சுவாமி புகார் தெரிவித்திருந்தார். இதைத்தொடர்ந்து புகார் குறித்து 15 நாட்களுக்குள் விளக்கம் அளிக்கும்படி ராகுல் காந்திக்கு உள்துறை அமைச்சகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
அதில், பிரிட்டனின் வின்செஸ்டர் நகரில் உள்ள ஒரு நிறுவனத்தின் இயக்குநராகவும், செயலாளராகவும் ராகுல் காந்தி பணியாற்றி வருவது தெரியவந்துள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், அந்த நிறுவனம் செலுத்திய 2005 மற்றும் 2006-ஆம் ஆண்டுக்கான வருமான வரிக் தாக்கலில் ராகுலின் பிறந்த தேதி சரியாக குறிப்பிடப்பட்டு, பிரிட்டனைச் சேர்ந்தவர் என சுட்டிக் காட்டப்பட்டிருப்பதாகவும் உள்துறை அமைச்சகத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, உண்மை நிலை என்னவென்பதை ராகுல் காந்தி விளக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Loading More post
அமெரிக்காவின் 46வது அதிபராக பதவியேற்றார் ஜோ பைடன்
அமெரிக்க துணை அதிபராக பதவியேற்றார் கமலா ஹாரிஸ்
வேளாண் சட்டங்களை ஒன்றரை ஆண்டுகள் நிறுத்திவைக்க தயார்: விவசாயிகளிடம் மத்திய அரசு உறுதி
பவுலர்களுக்கு கெட் அவுட்.. 7 பேரை விடுவித்தது மும்பை இந்தியன்ஸ்!
’’எந்த அதிபரும் பெறாத ஆதரவைப் பெற்றிருந்தேன்’’ : அதிபர் மாளிகையை விட்டு வெளியேறிய ட்ரம்ப்