தீவிர புயலாக மாறியது ஃபோனி !

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

வங்கக் கடலில் உருவாகியுள்ள ஃபோனி புயல் தீவிர புயலாக உருவெடுத்துள்ளது.


Advertisement

நேற்று இரவு நிலவரப்படி, ஃபோனி புயல், சென்னைக்கு தென் கிழக்கே 770 கிலோ மீட்டர் தொலைவில் நிலைக் கொண்டுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வடக்கு மற்றும் வடமேற்கு திசை நோக்கி 16 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து வரும் புயல், அடுத்த 24 மணி நேரத்தில் அதிதீவிர புயலாக மாறும் என்றும் வானிலை மையம் கூறியுள்ளது. 


Advertisement

ஃபோனி புயல் வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து செல்லக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. எனவே,  வட தமிழகத்தில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாகத் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

மேலும் வடதமிழகத்தின் கடலோரப் பகுதிகளில் இன்று 60 முதல் 70 கிலோ மீட்டர் வரையிலுமான வேகத்தில் காற்று வீசக்கூடும் என்றும் தென்மேற்கு மற்றும் மத்திய வங்கக்கடல் கொந்தளிப்பாகக் காணப்படும் என்பதால் மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் எனவும் வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.


Advertisement

ஃபோனி புயல், மே ஒன்றாம் தேதிக்குப் பிறகு, ஒடிசா கரையை கடக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

loading...

Advertisement

Advertisement

Advertisement